இராச்சிக் செயல்முறை

இராச்சிக் செயல்முறை (Raschig process) என்பது ஐதராக்சிலமீனை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு வேதிச் செயல்முறையாகும். செருமன் நாட்டு வேதியியலாளர் பிரடெரிக் இராச்சிக் இம்முறையை உருவாக்கினார். இச்செயல்முறையின் முக்கியமான படிநிலைக்கு 1887 ஆம் ஆண்டிலேயே இராச்சிக் காப்புரிமை பெற்றார். ஐதராக்சிலமீன் டைசல்போனேட்டை நோக்கி நைத்திரைட்டுடன் பைசல்பைட்டு சேர்த்து ஒடுக்கி பின்னர் இதை ஐதராக்சிலமோனியம் சல்பேட்டாக நீராற்பகுப்பு செய்வது காப்புரிமை கோரிய அம்முக்கியமான வினையாகும்[1]. நைலான் 6 பலபடியை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமான கேப்ரோலாக்டம் சேர்மத்தை பேரளவில் தயாரிப்பதற்கே உற்பத்தி செய்யப்படும் ஐதராக்சிலமீன் சேர்மத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது[2].

வர்த்தக முறையில் பயன்படுத்தப்படும் இராச்சிக் செயல்முறை பின்வரும் படிநிலைகளைக் கொண்டுள்ளது:[2]

  • அமோனியம் கார்பனேட்டு கரைசல் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக அமோனியா, கார்பனீராக்சைடு, தண்ணீர் ஆகியவை வினைப்படுத்தப்படுகின்றன.
  • அமோனியம் கார்பனேட்டுக் கரைசலுடன் நைட்ரசன் ஆக்சைடுகள் சேர்த்து ஒரு கார அமோனியம் நைத்திரைட்டு கரைசல் தயாரிக்கப்படுகிறது.
  • அமோனியம் நைத்திரைட்டுடன் கந்தக டையாக்சைடைச் சேர்த்து ஐதராக்சிலமீன் டைசல்போனேட்டு உருவாக்கப்படுகிறது.
  • ஐதராக்சிலமீன் டைசல்போனேட்டு பின்னர் நீராற்பகுக்கப்பட்டு ஐதராக்சிலமோனியம் சல்பேட்டாக மாற்றப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. DE patent 41987, Friedrich Raschig, "Verfahren zur Darstellung der hydroxylamindisulfonsauren Alkalisalze und von Hydroxylamin aus letzteren.", issued 1887-01-22 
  2. 2.0 2.1 "Hydroxylamine". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2000). DOI:10.1002/14356007.a13_527. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராச்சிக்_செயல்முறை&oldid=2749996" இருந்து மீள்விக்கப்பட்டது