இராச்சு குமார் குப்தா (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

இராச்சு குமார் குப்தா (Raj Kumar Gupta (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1935 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பஞ்சாப் சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பஞ்சாப் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [1]

இராச்சு குமார் குப்தா
Raj Kumar Gupta
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
பதவியில்
2002–2007
முன்னையவர்மனோரஞ்சன் கலியா
பின்னவர்மனோரஞ்சன் கலியா
தொகுதிமத்திய சலந்தர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1935
இறப்பு11 பிப்ரவரி 2020 (வயது 85)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இராச்சு குமார் குப்தா 2002 ஆம் ஆண்டில் மத்திய சலந்தர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பஞ்சாப் சட்டப் பேரவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] 2007 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் வேட்பாளராக இவர் பரிந்துரைக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இவர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். 2010 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசுக்கு மீண்டும் திரும்பினார் [3]

இராச்சு குமார் குப்தா 11 பிப்ரவரி 2020 அன்று தன்னுடைய 85 வயதில் இறந்தார் [4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajkumar Gupta Assuming Charge As Chairman PSIEC". 22 September 2008. https://www.outlookindia.com/newswire/story/rajkumar-gupta-assuming-charge-as-chairman-psiec/610635. பார்த்த நாள்: 12 February 2020. 
  2. "Punjab Assembly Election Results in 2002". பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
  3. "Punjab elections: In Jalandhar, Raj Kumar Gupta denied Congress ticket yet again". https://indianexpress.com/elections/punjab-assembly-elections-2017/punjab-elections-in-jalandhar-raj-kumar-gupta-denied-congress-ticket-yet-again-4477811/. பார்த்த நாள்: 12 February 2020. 
  4. "Captain Amarinder Singh mourns passing away of Ex-MLA Raj Kumar Gupta". 12 February 2020. https://www.ptcnews.tv/captain-amarinder-on-ex-mla-raj-kumar-gupta-death-punjab-news-en/. பார்த்த நாள்: 12 February 2020. 
  5. "CM mourns passing away of Ex-MLA". 12 February 2020. http://www.uniindia.com/cm-mourns-passing-away-of-ex-mla/north/news/1885473.html. பார்த்த நாள்: 12 February 2020.