இராஜகேசரி (புதினம்)

இராஜகேசரி, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். 2004 முதல் 2005 வரை இணைய மாத இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை, 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இராஜகேசரி
Rajakesari Tamil Historic Novel.jpg
நூலாசிரியர்கோகுல் சேஷாத்ரி
பட வரைஞர்கோகுல் சேஷாத்ரி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்பழனியப்பா பிரதர்ஸ்
வெளியிடப்பட்ட திகதி
ஜூலை 21, 2008
அடுத்த நூல்சேரர் கோட்டை

கதைச் சுருக்கம்தொகு

இப்புதினத்தின் கதைநிகழ் காலம் கிபி 1003. ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று விமரிசையான கொண்டாட்டத்திற்குத் தயராகிக் கொண்டிருந்தது சோழர் தலைநகரம்.[1]. அரசரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பிறபகுதிகளிலிருந்து மக்கள் தலைநகரை நோக்கி வந்து குவிந்தனர்.

ஓராண்டுக்கு முன் ராஜராஜனால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட ராஜராஜேஸ்வரம் (பிரகதீசுவரர் கோயில்) உருவாகிக் கொண்டிருந்தது. [2]. பெரிய பெரிய கற்கள் யானைகளால் இழுக்கப்பட்டப் பாரவண்டிகளிலிலிருந்து இறக்கப்பட்டன. திட்டத் தலைமைக் கணக்கர் ஆதித்தன் சூரியன், [3], அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பல வகையான பணிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். சிற்பிகள், சித்திரக்காரர்கள், தொழில் வல்லுநர்கள், சமயக் குரவர்கள் என பலதுறை வல்லுநர்களால் நிறைந்திருந்தது அந்த வளாகம். கடவுளுக்குப் பணிசெய்ய தேவரடியார் எனப்படும் 400 நடன மங்கையர் நாட்டின் பலபாகங்களிலிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.[4] பிறந்த நாள் விழாவில் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட “ராஜராஜ விஜயம்” என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற விஜயராஜ ஆச்சாரியரின் தலைமையில் முனைப்பாக ஒத்திகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன.[5].


சோழநாட்டின் தலைநகரம் இவ்வாறு பிறந்த நாள் விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கியிருக்க, பலநூறு காதங்களுக்கு அப்பால், சேரநாட்டு எல்லைகுட்பட்ட காட்டுப்பகுதியில் ராஜராஜ சோழனுக்கு எதிராக சதித் திட்டம் உருவானது. சதித்திட்டத்தை நிறைவேற்றச் சதிகாரர்கள் சோழர் தலைநகருக்குள் ஊடுருவி தக்க தருணத்தை நோக்கிக் காத்திருந்தனர். அதே சமயம் போரில் ஏற்பட்ட காயத்தால் படையிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மூத்த வீரன் கண்முன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். கொலையுண்டவன் இறக்குமுன் அவ்வீரனிடம் சோழ அரசனைக் கொல்ல உருவாகும் சதியைப் பற்றித் தெரிவித்துவிட்டு மாண்டு போகிறான். அதன் பின் அவ்வீரன் அரசியல் சதிச் சூழலில் சிக்கி மேற்கொள்ளும் பயணமும் விளைவுகளுமே இக்கதை.

கதாபாத்திரங்கள்தொகு

இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் சரித்திரத்தில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

 • ராஜராஜ சோழன் (வரலாற்றுப் பாத்திரம்)
 • ராஜராஜ மாராயர் (வரலாற்றுப் பாத்திரம்)
 • பரமன் மழப்பாடியார் (வரலாற்றுப் பாத்திரம்)
 • அரிகண்ட தேவன் (புனைவுப் பாத்திரம்)
 • அமன்குடி கிருஷ்ணன் ராமன் (வரலாற்றுப் பாத்திரம்)
 • அம்பலவாணர் (புனைவுப் பாத்திரம்)

மேற்கோள்கள்தொகு

 1. Several epigraphical references point to the fact that Rajaraja's birthday was celebrated during his times. The earliest such reference is provided by the Muttam Record of Rajaraja. South Indian Inscriptions-Vol 3.
 2. From the available inscriptions, it is surmised that Rajaraja commissioned the Big temple project sometime at around 1002 AD.South Indian Inscriptions-Vol 2 and Sivapadhasekaranin Thanjai Kalvettukkal, Ed.R.Nagasamy.
 3. Thanjavur temple inscriptions talk of this officer and his donations, which included bronze statues of Saivite Nayanmars. South Indian Inscriptions-Vol 2
 4. A lengthy inscription from Thanjavur temple records the names of all these girls, the temples they came from and the door number of houses allocated to them. Thalicheri Kalvettu.R.Kalaikkovan
 5. An inscription from Tiruppunturutti refers to this drama written by Suvarnan Naranan Battaradittan.T.V.Sadasiva Pandarathar, Pirkala Chozhar Varalaaru, Annamalai University Publications.

இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜகேசரி_(புதினம்)&oldid=2057175" இருந்து மீள்விக்கப்பட்டது