இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகம்

இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க 1957-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தை அன்றாட பயிற்சி நிலையம் (DTC SEREMBAN- Daily Teacher Center) என்றும் அழைப்பார்கள். ஆரம்ப காலத்தில், இப்பயிற்சி நிலையத்தில் இரு ஆங்கில துறையைச் சார்ந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் சீன துறையைச் சார்ந்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் மட்டுமே ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட்டது. பிறகு, 1974-இல் DTC SEREMBAN இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர் "Yam Tuan Seri Menanti" அவரின் பெயரை முன்னிட்டு நிறுவப்பட்டது. 1974-இல் இக்கல்லூரியில் பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கை 192-வும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 5-ஆகவும் உயர்ந்தது. திரு அ. பாலசந்திரன் அவர்கள் இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல் முதல்வராக நியமிக்கப்பட்டார். 20 கோடி செலவில் 24 hektar- நிலப் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்ட இக்கல்லூரி 31 ஜனவரி 1990-இல் இயங்க ஆரம்பித்தது. அப்பொழுது Puan Hajah Putri Kamariah binti Megat Ramli அவர்கள் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து Encik Haji Elias bin Mohammad Hanafiah அவர்கள் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இக்கல்லூரி இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. இப்பொழுது Tuan Musa bin Abdullah அவர்கள் கல்லூரியின் இயக்குநராக பணிப்புரிகிறார். அதைத் தொடர்ந்து Dr Mahender Sigh bin Nahar Sigh அவர்கள் துணை இயக்குநராக பணிப்புரிகிறார்.‎ ‎