இராஜ்கிர் திருவிழா
இராஜ்கிர் திருவிழா (Rajgir Mahotsav) அல்லது இராஜ்கிர் விழா, முன்பு இராஜ்கிர் நடன விழா[3][4] என்பது நடனம் மற்றும் இசைச் திருவிழாவாகும். இது முதன்முதலில் 1986-ல் இந்தியாவின் பீகாரில் உள்ள ராஜ்கிரில் ஆண்டுதோறும் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வாகத் துவங்கப்பட்டது. இது பீகார் அரசின் கலாச்சாரத் துறை மற்றும் பீகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் நாளந்தா மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.[5]
இராஜ்கிர் திருவிழா Rajgir Mahotsav | |
---|---|
நிகழ்நிலை | செயலில் |
வகை | திருவிழாக்கள் |
நிகழ்விடம் | கொய்லா அரங்கம், இராஜ்கர் பன்னாட்டு கூடல் அரங்கம் |
அமைவிடம்(கள்) | ராஜகிரகம், நாலந்தா மாவட்டம், பீகார் |
நாடு | இந்தியா |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் |
|
துவக்கம் | ஏப்ரல் 4, 1986 |
மிக அண்மைய | 27–29 திசம்பர் 2020[1] |
அடுத்த நிகழ்வு | 2021 |
வருகைப்பதிவு | சுமார் 1 இலட்சம்(2013)[2] |
செலவு மதிப்பீடு | ₹90 இலட்சம்[2] |
வலைத்தளம் | |
nalanda |
கண்ணோட்டம்
தொகு1986ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி இராஜ்கிரின் சுவர்ண பதர் பகுதியில் அப்போதைய பீகார் முதலமைச்சர் பிந்தேஸ்வரி துபே இந்த விழாவைத் தொடங்கி வைத்தார்.[6][4] பீகார் அரசின் சுற்றுலாத் துறை 1989ஆம் ஆண்டு வரை இந்த விழாவிற்கு நிதியுதவி அளித்தது. 1989க்குப் பிறகு, குறிப்பிடப்படாத காரணங்களால் இந்நிகழ்வு கைவிடப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ல், இது மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் பின்னர், பீகார் அரசாங்கத்தின் வருடாந்திர நிகழ்வாக நடைபெறுகிறது.[6]
டோங்கா பந்தயம், தற்காப்புக் கலைப் போட்டிகள், மெகந்தி போட்டி, பெண்கள் விழா, உணவு அரங்கம், கிராம விழா போன்ற பல்வேறு போட்டிகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் தேசிய மற்றும் பன்னாட்டுப் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இரத்னகிரி மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள கிலா மைதானம் இதன் தற்போதைய நிகழ்விடமாம்.[6] 2016-ல், இராஜ்கிர் விழா நவம்பர் 25 முதல் 27 வரை ஏற்பாடு செய்யப்பட்டது.[7]
2017-ல், இராஜ்கிர் விழா நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற்றது.[8]
அண்மைக்கால நிகழ்வுகள்
தொகு2019ஆம் ஆண்டின் வெற்றிகரமான இராஜ்கிர் திருவிழாவிற்குப் பிறகு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டின் இராஜ்கிர் திருவிழா இரத்து செய்யப்பட்டது. பீகார் மாநில சுற்றுலாத் துறையினால் நடத்தப்படும் ஒரு உணவக மேலாளர் முகேஷ் குமார் கூறுகையில், 2020ஆம் ஆண்டிலும், கோவிட் காரணமாக பெரும்பாலான மாநில சுற்றுலா நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டன. இதில் "புத்த பூர்ணிமா, இராஜ்கிர் திருவிழா மற்றும் சோனேபூர் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன," என்று கூறினார்.[9]
இராஜ்கிர் திருவிழா 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 திசம்பர் 1 வரை மூன்று நாட்கள் நாளந்தாவில் நடைபெற்றது. இதில் ஏராளமான இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கலந்து கொண்டனர். இந்த முறை இந்த திருவிழா விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் இராஜ்கிர் கண்காட்சிக்கு வந்தனர்.
இராஜ்கிர் நடன விழா 2023 வரும் அக்டோபர் 24 ஞாயிறு முதல் அக்டோபர் 26 செவ்வாய் வரை நடைபெறும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nitish Inaugurates Rajgir Mahotsav". PatnaDaily.Com. 2013-12-29. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ 2.0 2.1 "Tourists fail to keep Rajgir date". Telegraphindia.com. 2013-12-31. Archived from the original on 28 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ Nadim, Farrukh (2013-12-14). "Kailash Kher, Kavita Seth to perform at Rajgir Mahotsava". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ 4.0 4.1 Tripathi, Piyush Kumar (30 November 2015). "Bright spot fights fair gloom - Festival juggles themes over years". The Telegraph. Archived from the original on 4 December 2015. பார்க்கப்பட்ட நாள் 17 April 2016.
- ↑ Nadim, Farrukh (2013-12-22). "Bid to make Rajgir Mahotsava a spectacular event". The Times of India (Patna). பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ 6.0 6.1 6.2 Nadim, Farrukh (29 December 2012). "Deputy CM opens Rajgir festival". The Times of India (Patna). பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
- ↑ "An Enthralling Charm of Rajgir Mahotsav - Travel News India". travelnewsindia.com. 2016-12-01. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
- ↑ "अंतर्राष्ट्रीय राजगीर महोत्सव के राज्य स्तरीय कवि सम्मेलन में होगा हिंदी, उर्दू, अंगिका, बज्जिका, भोजपुरी, मैथिली, मगही के कवियों का समागम". angika.com. 2017-11-01. Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
- ↑ "Fearing second wave, Bihar tourism dept cancels all mega events". 2021-04-06.