இராதாராணி தேவி

வங்காள மொழி பெண் கவிஞர்

இராதாராணி தேவி (Radharani Devi) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான வங்காளா மொழி பெண் கவிஞர்களில் ஒருவராவார்.[1]

இராதாராணி தேவி
Radharani Devi
இயற்பெயர்
রাধারাণী দেবী
பிறப்பு13 நவம்பர் 1903
கொல்கத்தா
இறப்பு9 செப்டம்பர் 1989
கொல்கத்தா, இந்தியா
தொழில்எழுத்தாளர், கவிஞர்
தேசியம்இந்தியாn
காலம்இருபதாம் நூற்றாண்டு
துணைவர்சதேந்திரநாத் தத்தா (முதல் திருமணம்)
நரேந்திர தேப் (இரண்டாவது திருமணம்)
பிள்ளைகள்நபநீதா தேவ் சென்

இலக்கிய வாழ்க்கை

தொகு

1924 ஆம் ஆண்டு பாசுமதியில் வெளியான பீமாதா (மாற்றாந்தாய்) என்ற சிறுகதையே இவரது முதல் வெளியிடப்பட்ட படைப்பாகும். இதேபோல் இவரது முதல் கட்டுரை புருசு (ஆண்) என்பதாகும். இக்கட்டுரை கல்லோல் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 1929 ஆம் ஆண்டு தேவியின் முதல் கவிதை தொகுப்பு நூல் "இலிலாகமல் வெளியிடப்பட்டது.

தனது இரண்டாவது புத்தகமான புக்கர் பீனாவை அபராசிதா தேவி என்ற பெயரில் இவர் எழுதினார். அதன் பிறகு இவர் தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான போனோ போகோகி மற்றும் நான்காவது புத்தகமான பிசித்ரா ரூபினி இரண்டையும் தனது உண்மையான பெயரில் எழுதினார். [1]

வங்காள எழுத்தாளர் வட்டாரமான ரபிபாசரில் பிரமதா சோத்ரியுடனான விவாதத்தில் தேவி பிரபலமானார். அங்கு முதல் பெண் உறுப்பினராக இவர் சேருவதை முதலில் சரத் சந்திர சட்டபாத்யாயா எதிர்த்தார். ஆனால் பின்னர் சலதர் சென்னின் சமாதனப்படுத்தலுக்குப் பின்னர் வரவேற்கப்பட்டார். இருபதாம் நூற்றாண்டில் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த வங்காள மொழி இலக்கிய அரங்கில் பெண்களின் உரிமைக்காகப் போராடுவதாக இராதாராணி தேவி அறியப்பட்டார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இராதாராணி தேவி 13 வயதில் சதேந்திரநாத் தத்தாவை மணந்தார். தத்தா திருமணமான அதே வருடத்தில் ஆசியக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். எனவே தேவி மிக இளம் வயதிலேயே விதவையானார். ஒரு விதவையாக தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் கவிஞர் நரேந்திர தேப்பை சந்தித்தார். அவரை 1931 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் முதல் குழந்தையான மகன் பிறந்து சில நாட்களிலேயே நிமோனியா காரணமாக இறந்தார். இரண்டாவது குழந்தை நபனீதா தேவ் சென் தீவிர பெங்காலி பெண் கவிஞராக ஆனார் மற்றும் அமர்த்தியா சென்னை மணந்தார். [1] [3] தேவி மற்றும் தேப் இருவரும் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சரத் சந்திர சட்டபாத்யாய் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக இருந்தனர். தேவியின் மகளுக்கு தாகூர் நபனீதா என்றும் சட்டபாத்யாய அனுராதா என்றும் பெயரிட்டனர். தேவ் சென் பிறந்த சில நாட்களில் சட்டபாத்யாய் இறந்தார் [4]

ஆதாரங்கள்

தொகு
  • சன்சாத் பங்காலி சரிதாபிதன். (1998) இந்தியா: சாகித்ய சம்சத். இரண்டாம் பகுதி, பக்கம் 349-350.
  • ராதாராணி தேவி: வாழ்க்கை மற்றும் இலக்கியம் - பசந்தி தேப் (மசூம்தார்), வடக்கு வங்க பல்கலைக்கழகம். [5]
  • இந்திய இலக்கிய வரலாறு: 1911-1956, சுதந்திரத்திற்கான போராட்டம் : வெற்றி மற்றும் சோகம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "অপরাজিতা রাধারাণী". www.anandabazar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.
  2. "Feisty Radharani, mother of Nabaneeta Dev Sen, who did her own Sampradan in marriage!". Get Bengal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
  3. "নবনীতা দেব সেন: কলমের কালি ফুরোবার আগেই ফুরোলো জীবনের মেয়াদ". roar.media (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.
  4. "রাধারাণী দেবী (Radharani Devi): ছদ্মনামে বই লিখে উৎসর্গ করেছিলেন নিজেকেই". பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
  5. "Radharani Devi: Life and Literature - Basanti Deb (Mazumdar)" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாராணி_தேவி&oldid=3800183" இலிருந்து மீள்விக்கப்பட்டது