இராபர்ட்டு ஓவென் பேச்

தொழிற்துறை வேதியியலாளர் மற்றும் போரெதிர்ப்புவாதி

இராபர்ட்டு ஓவென் பேச் (Robert Owen Page) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலை சார்பு வேதியியலாளர் மற்றும் போரெதிர்ப்பு ஆதரவாளர் ஆவார். 1897 முதல் 1957 வரையிலான காலம் இவர் வாழ்ந்த காலமாகும்.

இராபர்ட்டு ஓவென் பேச் Robert Owen Page
பிறப்பு(1897-11-23)23 நவம்பர் 1897
நியூசிலாந்து, கிறிசுட்டுசர்ச், கேண்டர்பரி
இறப்பு14 சூலை 1957(1957-07-14) (அகவை 59)
பணிபோரெதிர்ப்புவாதி, தொழிற்துறை வேதியியலாளர்

வாழ்க்கை

தொகு

நியூசிலாந்து நாட்டிலுள்ள கிறிசுட்டுசர்ச் நகரில் 1897 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் ஓவென் பேச் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் பேச் கேண்டர்பரி கல்லூரியில் வேதியியல் கற்பிப்பவராகவும் அதே நேரத்தில் இவரது தாயார் சாரா சாண்டர்சு சமூக சீர்திருத்தங்களை ஊக்குவித்த ஒரு பெண்ணியவாதியாகவும் இருந்தனர். ராபர்ட்டின் நண்பர்கள் அவரை ராபின் என்று அறிந்திருந்தனர். 1914 வரை கிறிசுட்டுசர்ச் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஓவென் பேச் பயின்றார். பல்கலைக்கழக இளையோர் உதவித்ஹ்டொகையை வென்ற இவர் 1917 ஆம் ஆண்டு கேண்டர்பரி கல்லூரியில் சேர்ந்து வேதியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவருக்கு சர் சியார்ச்சு கிரே முதன்மை உதவித்தொகையும் ஏடன் பரிசும் வழங்கப்பட்டன [1].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டு_ஓவென்_பேச்&oldid=2964379" இலிருந்து மீள்விக்கப்பட்டது