இராபர்ட்டோ செவெதோ

இராபர்ட்டோ கார்வல்லோ தெ செவெதோ (Roberto Carvalho de Azevêdo, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ʁoˈbɛʁtu azeˈvedu]; பிறப்பு: அக்டோபர் 3, 1957) பிரேசில்|பிரேசிலிய பேராளரும் உலக வணிக அமைப்பில் 2006ஆம் ஆண்டிலிருந்து பிரேசிலின் தூதராகப் பணியாற்றியவரும் ஆவார்.[1] மே 2013இல் இவர் உலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013, செப்டம்பர் ஒன்றுக்குப் பிறகு தற்போதைய தலைமை இயக்குநர் பாசுகல் லாமியிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்கிறார்.[2]

இராபர்ட்டோ செவெதோ
Roberto Azevêdo
உலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநர்
பதவியில்
1 செப்டம்பர் 2013
Succeedingபாசுகல் லாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராபர்ட்டோ கார்வல்லோ தெசெவெதோ

3 அக்டோபர் 1957 (1957-10-03) (அகவை 67)
சல்வடார், பஹியா, பிரேசில்
குடியுரிமைபிரிசிலியர்
தேசியம்பிரேசிலியர்
துணைவர்மாரியா நாசரெத் ஃபரானி செவெதோ
வேலைசார்பாளர்

இளமையும் கல்வியும்

தொகு

தாய்மொழியான போர்த்துகீசியத்தைத் தவிர்த்து ஆங்கிலம், பிரான்சியம், எசுப்பானியம் மொழிகளிலும் வல்லமை படைத்த செவெதோ பிரேசிலியாப் பல்கலைக்கழகத்திலிருந்து மின்னியல் பொறியியலில் படம் பெற்றுள்ளார். பின்னதாக ரியோ பிராங்கோ இன்ஸ்ட்டியூட்டிலிருந்து பன்னாட்டு உறவாண்மையில் மேற்பட்டம் பெற்றார்.[1]

பணிவாழ்வு

தொகு

இராபர்ட்டோ செவெதோ பிரேசிலின் வெளியுறவுத் துறையில் 1984ஆம் ஆண்டில் பணியிலமர்ந்தார். வாசிங்டன் டி.சி (1988–91) மற்றும் மான்டிவெடீயோ (1992–94) நகரங்களில் உள்ள பிரேசிலின் தூதரகங்களிலும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் உள்ள நிரந்தரப் பேராளர் அலுவலகத்திலும் (1997–2001) பணி புரிந்துள்ளார்.[1]

கீழ்கண்ட பதவிகளில் இவர் இருந்துள்ளார்:[1]

  • 1995–96: வெளியுறவுத் துறை அமைச்சின் பொருளாதாரப் பிரிவின் துணைத்தலைவராக
  • 2001–05: பிணக்குத் தீர்வுப் பிரிவின் தலைவர்
  • 2005–06: பொருளாதார விவகாரத் துறையின் இயக்குநர்
  • 2006–08: பொருளியல், தொழில்நுட்ப விவகார துணை அமைச்சர்.

2008இலிருந்து ஜெனீவாவில் உலக வணிக அமைப்பு உள்ளிட்ட பல பொருளாதார அமைப்புக்களிடம் பிரேசிலின் சார்பாளராகப் பங்கேற்றுள்ளார்.[1]

பிரேசிலுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான பருத்திப் பிணக்கை பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்து வைத்தவர்களில் முதன்மையானவராக இருந்தார்.[1] தோஹா வட்டங்களில் பிரேசிலின் சார்பாளராக வாதாடினார்.

தனி வாழ்க்கை

தொகு

செவெதோ சக தூதரும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நிரந்தர பேராளருமான மரியா நசரெத் ஃபரானியைத் திருமணம் புரிந்துள்ளார்; இருவருக்கும் இரு மகள்கள் பிறந்துள்ளனர்.[1]

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Biography: Roberto Azevedo" (PDF). WTO. பார்க்கப்பட்ட நாள் 2013-05-07.
  2. "WTO names Roberto Azevedo as new head". BBC News Online (UK). 7 May 2013. http://www.bbc.co.uk/news/business-22443597. பார்த்த நாள்: 2013-05-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டோ_செவெதோ&oldid=3986721" இலிருந்து மீள்விக்கப்பட்டது