இராபர்ட் கிரீன் இங்கர்சால்

இராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert G. Ingersoll) 1833 ம் ஆண்டு , ஆகத்து 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மகானத்திலுள்ள டிரத்தன் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். தமது தந்தையின் ஐந்து குழந்தைகளில் இவர் இளையவர். சிறுவயதிலிருந்தே கூரிய சிந்தனைத்திறன் பெற்றவராக திகழ்ந்தார். உயர்கல்விக்குப் பின் சட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது படைத்தளபதியாக பணியாற்றினார். போர் முடிந்ததும் அரசியலில் நுழைந்தார்.

இராபர்ட் கிரீன் இங்கர்சால்
Robert G. Ingersoll - Brady-Handy.jpg
பிறப்பு11 ஆகத்து 1833
Dresden
இறப்பு21 சூலை 1899 (அகவை 65)
Dobbs Ferry
பணிஎழுத்தாளர், கட்டுரையாளர், மெய்யியலாளர்
கையெழுத்து
RobertGIngersoll-signature.svg

கடவுள் மறுப்புதொகு

கடவுளே இவ்வுலகைப் படைத்தார், சில விதிகளை வகுத்தார், மனிதர்களைப் பலகீனமானவர்களாகவும், அறியாமையில் உழல்பவராகவும் விட்டுவிட்டார் என்பன போன்ற சிந்தனைகளை மறுத்தார். மனிதர்கள் இவ்வுலகில் துன்பப்பட்டாலும், மறுஉலகில் இன்பம் பெறுவர் எனும் நம்பிக்கையையும், துன்பம் மனிதனை தூய்மையாக்கும் போன்ற கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அவரது கொள்கைப் பிடிப்பின் காரண்மாகவும், நேர்மையினாலும், திறமையினாலும் இல்லியான்சு மகானத்தின் ஆளுனராகும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் இங்கர்சாலை சந்தித்து தங்கள் சமயம் சார்ந்த விமர்சனங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே தங்கள் பெயரை ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப்போம் என்றனர். அதற்கு அவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் பதவி அவரை விட்டு சென்றது.

பங்களிப்புக்கள்தொகு

மானுட அன்பே உலகிலேயே தலைசிறந்த நெறி என்றார். இறைநம்பிக்கை, போதனை, செபம் இவற்றைவிட மனிதர்களை அன்பு செய்வதே உயர்ந்தது என வாதிட்டார். கடவுளை அன்பு செய்வதைவிட மனிதனை அன்பு செய்வதே முக்கியம் என்றார். மனித குலத்தின் மகிழ்ச்சியே நமது நோக்கம். அதனை நாம் வாழும் இக்காலத்திலேயே முழுமையாக அடைந்துவிட முடியாது, ஆனால் நமது உழைப்பினால் அம்மகிழ்ச்சியை ஓரளவிற்கேனும் மனிதகுலத்திற்கு தரமுடியும் என்று வாதிட்ட இங்கர்சால் அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்தார். அவர் 1899ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இவர் எழுதிய புத்தகங்கள்தொகு

  1. நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
  2. பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள்
  3. நான் நாத்திகவாதி ஆனதேன்
  4. கடவுள்
  5. இரண்டு வழிகள்
  6. மதம் என்றால் என்ன
  7. வால்டையரின் வாழ்க்கை சரிதம்[1]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.tamilnool.com/keyboard_search/field_list.php?field=Author&q=%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

வெளி இணைப்புக்கள்தொகு