இராபின் ஊட்

இராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் (Robin Hood) ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப்பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை. ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து வாழ்வு நடத்தியவனின் கதை.

ராபின் ஹூட் நினைவாக நாட்டிங்காம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலை

உண்மை நிகழ்வாக கூறுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இக்கதையைத் தழுவி பலத் திரைப்படங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் நாடகங்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கதையின்படி இவன் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் லாக்ஸ்லே, (லாக்ஸ்லே வின் இளவரசன்) நாட்டிங்காம் அரண்மணை அருகில் நடந்தவையாகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கதையின்படி வாழ்ந்த காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம் மறைந்தது 17 அல்லது 18 ம் நூற்றாண்டாக இருக்லாம் என கருதப்படுகின்றது.

தமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற ஏழைப்பங்காளானாக வரும் கதாபாத்திரங்களுக்கு ராபின் உட் என்னும் அடைமொழியுடன் கூடிய பெயர்களை வைப்பதுண்டு. உதாரணம் நான் சிகப்பு மனிதன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபின்_ஊட்&oldid=3844205" இலிருந்து மீள்விக்கப்பட்டது