இராப்பியணிப்பாசி
இராப்பியணிப்பாசி (Rappemonads) 1990 களின் பிற்பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்பாசிகளில் ஒன்றாகும். இதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் இரண்டே வந்துள்ளன அதுவும் 2011ல் தான். இது புதிதாக கண்டுபிடிககப்பட்ட மிகப்பெரிய பாசிக்குடும்பமாகும். ஆனால் வெளியுலகிற்கு பரவலாக அறியப்பட்டது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு ஆய்வுக்கட்டுரைகள் வந்த பிறகு தான். இவை வாழ்மரங்களில் புது கிளையாகவே அறியப்பட்டுள்ளது. இதுவும் வேறுபாசிகளைப் போல ஒளிச்சேர்க்கையால் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடியது. இவை இதுவரை கண்டுபிடிக்கப்படாத பரவலாக வாழ்கின்ற கடல் மற்றும் நன்னீர் பாசிகள்.
இதுவரை (கடந்த) கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாவரம், விலங்கு, பூஞ்சை மற்றும் இதர வாழிகளில் அறியப்பட்டதும் விவரிக்கப்பட்டதும் 20 இலட்சம் மேற்பட்ட உயிர்களாகும். உயிர்பரவியிருத்தலை ஆராய்கையில் பெரும்பாலும் பாசிகளை வெளித்தோற்றங்களை கொண்டே கண்டறிந்துள்ளனர். சமீபத்திய அறிவியல் வளர்ச்சியான டி.என்.ஏ மூலக்கூறு தொடரறி என்னும் முறையின் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டறிந்தவர்கள் இன்னும் ஒரு கோடிக்கும் மிகுதியாக நுண்ணுயிர்களையும் மற்றும் ஒருசெல்லுயிரிகளையும் கண்டறிய வாய்ப்புள்ளதென கூறுகிறார்கள். காரணம் இவை மிகநுண்மையான கண்ணிற்கு புலப்படாத உயிர்களும் பரந்து வாழ்தலும் இதன் சூட்சமங்களாகத் திகழ்கின்றன. இன்னும் தொழில் நுட்பங்கள் வளர பல அறிய விந்தைவாழிகளை அறிய முடியும்.
இவை கனிகம்/உருமனிகளைக்கொண்ட மெய்க்கருவுயிரிகளைச் சார்ந்த நுண்பாசிகளாகும். இவை பசுங்கனிகங்களைக்கொண்டு தனக்கான ஆற்றலை ஒளிசேர்க்கையிலிருந்து உற்பத்தி செய்துகொள்கிறது.
பெயர்க்காரணம்
தொகுமிக்கேல் இராப்பி என்பவரால் கண்டறியப்பட்டதால் இவை ராப்பிகள் எனவும் மோனாடு எனும் வார்த்தை - குழு அல்லது அணியை உணர்த்துகிறது. பாசி இனத்தைச் சார்ந்தவையால் இவை இராப்பியணிப்பாசி எனப் பெயர் பெற்றது.
வரலாறு
தொகுஇதை மாண்டரி கரை நீர்வாழினக் காட்சியக ஆராய்ச்சி நிலையம் (MBARI, USA - Monterey Bay Aquarium Research Institute, USA) மற்றும் டலௌசி பல்கலைக்கழகம் (Dalhousie University, Canada)இணைந்து முனைவர் டாம் ரிச்சர்ட்சு தலைமையில் இதற்கு முன்னர் அறியப்படாத ஒருசெல்லுயிரியை கண்டறிந்துள்ளனர். இவைகள் சிவப்புப்பாசிகளுக்கு ஒத்துக்காணப்படுகிறது. இதை 90 களின் பிற்பாதியில் கண்டறிந்தவர் மிக்கேல் ராப்பி என்பவராகும். அவர் பெயராலாயே ராப்பிமோனாடுகள் என அழைக்கப்படுகிறது.
சிறப்பியல்புகள்
தொகுஇது புதுவகை நுண்பாசிகள் - பாசிகுழுக்கள். இவை பல சூழ்நிலைகளான நன்னீர் மற்றும் கடல்நீரில் அறியப்படாமல் இவ்வளவு நாள் விரவி வளர்ந்துள்ளது. இது இயற்கையின் அறிய விந்தைகளில் ஒன்றாகத் தோன்றுகிறது.இதில் உள்ள டி.என்.ஏ மூலக்கூறானது மற்ற பொதுவாய் அறியப்பட்ட பாசிகளில் இருந்து மாறுபட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர். மாந்தனும் பூஞ்சைகளும் கூட ஒத்திருக்கிறதென அறிகையில் இப்பாசிகளுக்குள் உள்ள வேறுபாடு வியப்பைக் கூட்டுகிறது எனவும் கூறுகின்றனர். இது வளரூடகங்களில் வளர்க்க இயலாதலால் தான் இவைகளையறிய இத்தனைக்காலம் பிடித்திருக்கிறது போலும்.
பயன்கள்
தொகுஇதுவும் ஒரு நுண்பாசிகளென்பதால் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.நுண்பாசிகள் கரியமிலவளி குறைப்பில் பெரும்பங்கு வகிக்குமென்பதால் அதில் பல ஆராய்ச்சிகள் நடந்தவண்ணமுள்ளன. இவைகளும் பாசிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளவையால் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இவை மிகச்சிறியவையென்பதால் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வாய்ப்புள்ளது. இதை வளரூடகங்களில் வளர்க்க முற்படுவதின் மூலம் ஒரு புது ஆராய்ச்சியுலகை எதிர்நோக்கலாம். மேலும் இவைகளின் தன்மை குறித்து அலசினால் எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறையைப்போக்கும் நுண்ணுயிரெரிபொருளின் ஊற்றாக மாறலாம்.
மேற்குறிப்புகள்
தொகு- http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3029697/ Kim, E., Harrison, J., Sudek, S., Jones, M. D. M., Wilcox, H. M., Richards, T. A., Worden, A. Z., & Archibald, J. M. 2011. Newly identified and diverse plastid-bearing branch on the eukaryotic tree of life. Proc. Natl. Acad. Sci. U.S.A. Online Early. doi:10.1073/pnas.1013337108
- http://www.plantphysiol.org/cgi/content/abstract/pp.111.173500v1
- http://www.physorg.com/news/2011-01-newly-group-algae-fresh-ocean.html
- http://newenergyandfuel.com/http:/newenergyandfuel/com/2011/01/28/a-fresh-and-salt-water-algae-discovered/
- http://www.nhm.ac.uk/natureplus/blogs/science-news/tags/marine?fromGateway=true