இராப் மைல்சு

இராப் மைல்சு (பிறப்பு: சூலை 23, 1957) என்பவர் மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்களில் ஒருவர் ஆவார். இவர் ஹல் பல்கலைக்கழகத்தில் நிரல் மொழி (சி சாப்) மற்றும் மென்பொருட் பொறியியலில் விரிவுரையாளராகவும் இருந்துள்ளார்.[1][2]

இராப் மைல்சு
சிவப்பு மூக்கு நாள், உரையின் போது இராப் மைல்சு
சிவப்பு மூக்கு நாள், உரையின் போது இராப் மைல்சு
பிறப்பு (1957-07-23)23 சூலை 1957
வதிவுஐக்கிய இராச்சியம்
தேசியம்இங்கிலாந்து
அறியப்பட்டதுவிரிவுரையாளர்

இராப் சி சாப், எக்ஸ்என்ஏ, விண்டோசு செல்லிடைத் தொலைப்பேசி மேம்பாடு மற்றும் உட்பதித்த மேம்பாடு குறித்து நெட் மைக்ரோ கட்டமைப்பு பயன்படுத்தி உலகளவில் பல்வேறு உரைகளை வழங்கியுள்ளார் இராப் எக்சு என் ஏ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் டொனால்ட் தாம்சனுடன் நெட் மைக்ரோ ப்ரேம்வொர்க் என்னும் புத்தகத்தினையும் எழுதியுள்ளார்.

இராப் பலமுறை வருடாந்திர மைக்ரோசாப்ட் இமேஜின் கோப்பையின் நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[3] 2009-ல், இராப் மென்பொருள் வடிவமைப்பு போட்டியின் "தலைவராக" தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

இராப் தற்போது தி சி4டிஐ பீட்டாவில் ஹல் எண்ணிம குழுமத்தின் ஒரு பகுதியாக மாதாந்திர அர்டுயினோ வன்பொருள் குழுமத்தை நடத்துகிறார்.[5]

நூல் பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rob Miles - Announcement on leaving the University of Hull". robmiles.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-17.
  2. "Rob Miles - University of Hull". hull.ac.uk. Archived from the original on 2016-06-25. பார்க்கப்பட்ட நாள் 2014-01-07.
  3. "Imagine Cup Student Competition, Software Design Invitational from a judge point of view". Imaginecup.com. பார்க்கப்பட்ட நாள் 2009-03-16.
  4. "Imagine Cup Student Competition, Meet Your Competition Captains". Imaginecup.com. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2009-03-16.
  5. Miles, Rob. "Arduino Fun and Games at C4DI". www.robmiles.com. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராப்_மைல்சு&oldid=3615720" இலிருந்து மீள்விக்கப்பட்டது