இராமசாமி சிவன்

இராமசாமி சிவன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழிசை அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற மகா வைத்தியநாத அய்யரின் தமையன் ஆவார். இவரது தந்தை துரைசாமி அய்யரிடம் தனது துவக்க கால இசைப் பயிற்சியைப் பெற்ற இராமசாமி சிவன் பின்பு மாநோன்புச்சாவடி வேங்கட சுப்பயரிடம் இசை பயின்றார்.

இராமசாமி சிவன் தனது பெரிய புராணக் கீர்த்தனைகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.

மேற்கோள்

தொகு

கலைக்களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு - இரண்டாம் பாகம்- பக்கம் 65

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமசாமி_சிவன்&oldid=4132259" இலிருந்து மீள்விக்கப்பட்டது