இராமன் இயந்திரம்
இராமன் இயந்திரம் (Raman Engine) என்பது ஈருந்துபொருள் ஏவூர்தி இயந்திரம் ஆகும். இசுகைரூட் ஏரோசுபேசு என்ற இந்திய தனியார் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் விக்ரம் குடும்பவகை ஏவூர்திகளில் இராமன் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.[1] நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர் சர் சி.வி. ராமன் நினைவாக இந்த இயந்திரத்திற்கு இராமன் இயந்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
பயன்பாடு | ஏவூர்தி உந்து எரிபொருள் |
---|---|
குறிப்பிடத்தக்க ஆய்வுகள் | 2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதி சோதிக்கப்பட்டது |
கண்டுபிடித்தவர் | இசுகைரூட் ஏரோசுபேசு |
தொடர்புடைய கருவிகள் | துல்லியமான சுற்றுப்பாதை சரிசெய்தல் |
விளக்கம்
தொகுசமச்சீரற்ற இருமெத்திலைதரசீன், இருநைட்ரசன் டெட்ராக்சைடு ஆகிய உந்து பொருள்களை இராமன் இயந்திரம் பயன்படுத்தும். இவ்வுந்து பொருள்களைப் பயன்படுத்தினால் இராமன் இயந்திரம் தன்னிச்சையாகத் தானே தீப்பற்றிக் கொள்ளுன் வசதியைப் பெறுகிறது.[2] இதன் உட்செலுத்தும் தட்டு முற்றிலும் முப்பரிமானப் பொருளாள் அச்சிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் விக்ரம் 1 ஏவூர்தியில் 4 திரள்களில் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு திரளும் 3.4 கிலோநியூட்டன் உந்துதலை உருவாக்கி 850 நியூட்டன் உந்துதலை உற்பத்தி செய்யும். இது பல ஏவூர்தி இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. ஆனால் துல்லியமான சுற்றுப்பாதை சரிசெய்தலுக்கு இந்த இயந்திரம் தேவைப்படுகிறது.[3][4]
வளர்ச்சி மற்றும் சோதனை
தொகு2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இசுகைரூட் ஏரோசுபேசு நிறுவனம் முதன்முறையாக இராமன் இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதித்தது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "First Indian start-up firm Skyroot Aerospace to test fire rocket engine 'Raman': All you need to know". Jagranjosh.com. 2020-08-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
- ↑ Skyroot Aerospace: Raman Engine Test Fire (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-25
- ↑ "With ISRO assistance, India's Skyroot Aerospace aims maiden rocket launch by Dec-2021". WION (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
- ↑ Exclusive Details of Skyroot's Raman Engine (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-01-25
- ↑ Narasimhan, T. E. (2020-08-12). "Skyroot Aerospace first private company to test upper stage rocket engine". Business Standard India. https://www.business-standard.com/article/companies/skyroot-aerospace-first-private-company-to-test-upper-stage-rocket-engine-120081200445_1.html.