இராமாயண தரிசன சித்திரக் கூடம்

இராமாயண தரிசன சித்திரக் கூடம் என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி, விவேகானந்தபுரத்தில் அமைக்கப்பட்டுவரும் ஒரு ஓவியக் கண்காட்சிக் கூடமாகும்.

கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆன்மிக பொழுதுபோக்கு அம்சங்களையும், இயற்கை வளம் குறித்த பயிற்சி களையும் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர் மையம் அளித்து வருகிறது. இங்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடற்கரையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது, இதே வளாகத்தில் 2013 நவம்பர் 19 அன்று இராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி அமைக்கும் பணி தொடங்கியது. இந்தக் கூடம் ரூ. 15 கோடி மதிப்பீட்டில், 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுவருகிறது. இக்கண்காட்சி கூடத்தில் வால்மீகி ராமாயணத்தின் 108 முக்கிய அம்சங்களை விளக்கும் மூலிகை ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியின் முகப்பில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அடி உயரத்தில் வீர அனுமனின் கருங்கல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி மண்டபத்தின் மேல் மாடியில் பாரத மாதா திருக்கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 15 அடி உயரத்தில் பாரத மாதாவின் பஞ்சலோக சிலை இடம்பெறவுள்ளது. இந்த கூடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2017 சனவரி 12 அன்று இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம், இக்கண்காட்சியை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி அனுமதிக்கப்படும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "குமரியில் ராமாயண தரிசன சித்திரக் கூடம்: ஜன. 12-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்". செய்தி. தி இந்து. 20 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.