இராமீச்சுரக் கோவை
இராமீச்சுரக் கோவை என்னும் நூலைத் தான் பாடியுள்ளதாகக் கயாதர நிகண்டு பாடிய கயாதரர் குறிப்பிட்டுள்ளார்.
- பொருள் விளக்க அந்தாதியாகிய நிகண்டு நூலைக் கேட்ட மக்கள் தம் வினையிலிருந்து விடுபட இராசீச்சரக் கோவை என்னும் நூலைப் பாடினான். [1][2]
- இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை.
இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑
- மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டிந்த மேதினியோர்
- தாவும் வினை கெடச் சாற்றிய தென்றதமிழ்த் தேவை மன்னும்
- கோவை இராமீச்சுரக் கோவை சொன்ன குருபரன் – கயாதர நிகண்டு 402
- ↑
- அரும்பொருள் அந்தாதி சூடிய அம்பிகையைத்
- தரும்பொருள் செய்த பராபரையான் தினம் தண்டமிழோர்
- விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் – கயாதர நிகண்டு 566