இராமு ராம்தேவ்

இந்தியக் கலைஞர்

இராமு ராம்தேவ் (Ramu Ramdev) வட இந்திய ஓவியக்கலையின் பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் பாணிகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் ஓவியக் கலைஞர் ஆவார்.[1] 1969 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியக் கலையைப் நுண்படிவமாகப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துள்ளார். இளம் கலைஞர்களுக்கு நுட்பங்களைக் கற்பிக்கிறார். ஆண்டுதோறும் செய்ப்பூரில் உள்ள சிட்டி பேலசில் கோடைக்கால முகாம்களை நடத்துகிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறார். அவரது பணிக்கான எடுத்துக்காட்டுகளாக பிரித்தானிய அருங்காட்சியகத்தையும் மற்றும் பிற தொகுப்புகளையும் கூறலாம்.[2] இராமு ராம்தேவின் சேவைகளைப் பாராட்டி, 2010 ஆம் ஆண்டில் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான தேசிய மாசுட்டர் விருதைப் பெற்றார்.

தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், சிறீ கோபிந்த் ராம்தேவ் மற்றும் சிறீ இராமு ராம்தேவ் ஆகியோருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கைவினைஞர் மற்றும் நெசவாளர்களுக்கான தேசிய மாசுட்டர் விருதை பிரணாப் முகர்ச்சி, வழங்கினார்.

மேற்கோள்கள் தொகு

  1. D. K. Taknet, Jaipur: Gem of India (International Institute of Management of Entrepreneurship, 2013); artist's website: http://ramuramdev.com/about-us/
  2. A tinted drawing of an elepant is in the British Museum, accession number 2000,0329,0.1, see https://www.britishmuseum.org/collection/object/A_2000-0329-0-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமு_ராம்தேவ்&oldid=3739919" இலிருந்து மீள்விக்கப்பட்டது