இராமெல்சுபெர்கைட்டு

ஆர்சனைடு கனிமம்

இராமெல்சுபெர்கைட்டு (Rammelsbergite) என்பது NiAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிக்கல் ஆர்சனைடு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. உலோக வெள்ளி நிறம் முதல் வெள்ளை, சிவப்பு நிறங்களில் நேர்ச்சாய்சதுரப் பட்டக படிகங்களாக உருவாகிறது. மேலும் பொதுவாக மிகப்பெரிய திரட்சிகளாக இருக்கும். 5.5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் 7.1 என்ற ஒப்படர்த்தி அளவும் கொண்டுள்ளது.

இராமெல்சுபெர்கைட்டு
Rammelsbergite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுNiAs2
இனங்காணல்
நிறம்மங்கலான இளஞ்சிவப்பு நிறத்துடன் வெள்ளை
படிக இயல்புஅரிதாக பட்டகம்; பொதுவாக திரட்சி, மணிகள், இழைகள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{101}
பிளப்பு{101} இல் தெளிவு
முறிவுஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5.5–6
மிளிர்வுஉலோகத் தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல் கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.0–7.1
ஒளியியல் பண்புகள்திசைமாறுபாட்டுப் பண்பு
பலதிசை வண்ணப்படிகமைபலவீனமான, மஞ்சள் முதல் இளஞ்சிவப்பு நிறம் மற்றும் நீலம் கலந்த வெள்ளை
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இராமெல்சுபெர்கைட்டு கனிமத்தை Rmb[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

முதன்முதலில் 1854 ஆம் ஆண்டில் செருமனியின் சாக்சோனியில் உள்ள சினீபெர்க் மாவட்டத்தில் இராமெல்சுபெர்கைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. செருமன் வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர், கார்ல் பிரடெரிக் ஆகசுட்டு இராமெல்சுபெர்கு (1813-1899) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

நடுத்தர வெப்பநிலை இழை பகுதிகளில் சுகூட்டெருடைட்டு, சாப்லோரைட்டு, லோலிங்கைட்டு, நிக்கோலைட்டு, தாயக பிசுமத், தாயக வெள்ளி, அல்கோடோனைட்டு, தோமைகைட்டு மற்றும் யுரேனைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்த ஒரு நீர் வெப்ப கனிமமாகத் தோன்றுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Mindat.org
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  • Mineral Galleries
  • Schumann, Walter (1991). Mineralien aus aller Welt. BLV Bestimmungsbuch (2 ed.). p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-405-14003-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமெல்சுபெர்கைட்டு&oldid=4145706" இலிருந்து மீள்விக்கப்பட்டது