இராமேசுவர்லால் கப்ரா

இந்தியத் தொழிலதிபர்

இராமேசுவர்லால் கப்ரா (Rameshwarlal Kabra) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார். கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களில் பணியாற்றியதற்காக 2018 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1][2]

வங்காளதேசத்திலிருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்த இராமேசுவர்லால் கப்ரா மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினார். மும்பையில் உள்ள ஒரு சிறிய மின்பொருட்கள் கடையில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கினார். ஆர் ஆர் கேபல் நிறுவனத்தை நிறுவினார். இக்குழு அதன் பிரிவு சந்தையில் முன்னணியில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. IANS (2018-01-26). "Maharashtra bags maximum Padma awards this year". Business Standard India. https://www.business-standard.com/article/news-ians/maharashtra-bags-maximum-padma-awards-this-year-118012600428_1.html. 
  2. "Padma Awards 2018 announced". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
  3. "Management & Founder Chairman - Rameshwarlal Kabra | RR Global International". www.rrglobal.co. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேசுவர்லால்_கப்ரா&oldid=3947258" இலிருந்து மீள்விக்கப்பட்டது