இராமேந்திர குமார்

இந்திய அரசியல்வாதி

இராமேந்திர குமார் (Ramendra Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல்வாதியாகவும் இந்தியாவில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். பேகுசராய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[1] இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலக உறுப்பினராகவும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசு கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார். 1980-1995 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை பர்ககானை பிரதிநிதித்துவப்படுத்தி பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[2][3][4][5][6] மக்களவை மாற்றும் மாநிலங்களவை இரண்டிலும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேந்திர சர்மாவின் மகன் இராமேந்திர குமார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "lsbi08". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
  2. "Bihar Vidhan Sabha" (PDF).
  3. "Bihar Vidhan Sabha" (PDF).
  4. "Bihar Assembly Election Results in 1980". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  5. "Bihar Assembly Election Results in 1985". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  6. "Bihar Assembly Election Results in 1990". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேந்திர_குமார்&oldid=3858660" இலிருந்து மீள்விக்கப்பட்டது