இராம் அழுத்தம்
இராம் அழுத்தம் (Rampressure) என்பது பாய்ம ஊடகத்தின் வழியாக நகரும் ஒரு பொருளின் மீது நெருக்கும் அழுத்தத்தைக் குறிக்கிறது. அப்பொருளின் மீது வலுவான பின்னிழுப்பு விசையை அப்பொருளின் மீது செலுத்துகிறது. இவ்வழுத்தம் இச்சமன்பாட்டில் கொடுக்கப்படுகிறது.
இங்கு P என்பது அழுத்தத்தைக் குறிக்கிறது. p – பாய்மத்தின் அடர்த்தியையும் v – பாய்மத்திற்கும் நகரும் பொருளுக்கும் இடையே உள்ள திசைவேகத்தையும் குறிக்கிறது. உதாரணமாக, பூமியின் வளிமண்டலம் வழியாக பயணம் செய்யும் ஒரு எரிவெள்ளி உருவாக்கும் அதிர்ச்சி அலையை, எரிவெள்ளியின் முன்னுள்ள காற்றில் உண்டாக்கும் அதிவிரைவு அழுத்தம் தோற்றுவிக்கிறது. தொடக்க நிலையில் தோன்றும் அழுத்தம் இராம் அழுத்தம் எனப்படுகிறது. தொடக்கத்தில் இவ்வழுத்தம் காற்றில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இது எரிவெள்ளியைச் சூழ்ந்து அதைச் சூடாக்குகிறது [2].
கொத்துகளில் உள்ள விண்மீன் பேரடைகள் கொத்து ஊடகங்களின் வழியாகச் நகரும் போது இத்தகைய இராம் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றன. விண்மின்களிடை வாயுவில் விண்மீன் பேரடையிலிருந்து நீக்கமடைய போதுமான திறனாக இருக்கும் [3].
மேற்கோள்கள்
தொகு- Grebel, Eva K.; Gallagher, John S.; Harbeck, Daniel (2003). "The Progenitors of Dwarf Spheroidal Galaxies". Astronomical Journal 125 (4): 1926–1939. doi:10.1086/368363. Bibcode: 2003AJ....125.1926G. https://archive.org/details/sim_astronomical-journal_2003-04_125_4/page/1926.
- Hogg, David W. (2006). "Air resistance". arXiv:physics/0609156.