இராம் கௌரி சங்கரலயா
இராம் கௌரி சங்கரலயா (Ramgauri Sangralaya) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாகுர்பாரி கோயில் அருகே உள்ள இரெனாக் சந்தைப் பகுதியில் ஒரு தனியார் அருங்காட்சியகமாக இயங்குகிறது. சிக்கிம் மாநிலத்தின் முதல் அரசாங்க செய்தித்தாளான சிக்கிம் எரால்டின் தாயகம் இராம் கௌரி சங்கரலயம் என்று கருதப்படுகிறது. முத்திரைகள், நாணயங்கள் மற்றும் செய்தித்தாள்கள் இங்கு சேகரிக்கப்படுகின்றன. மேலும், இந்த அருங்காட்சியகம் சிக்கிமின் அரசியல் வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.[1][2]
அமைவிடம் | இரெனாக்கு - பாக்யோங் மாவட்டம், சிக்கிம், இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 27°10′36″N 88°38′36″E / 27.176622°N 88.6432°E |
வகை | Museum |
உரிமையாளர் | கணேசு குமார் பிரதான் |
சேகரிப்பு
தொகுஇராம் கௌரி சங்கரலயா அருங்காட்சியகத்தில் சிக்கிமின் முன்னாள் இமாலய இராச்சியத்தின் அரசியல் வளர்ச்சி தொடர்பான ஏராளமான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. முந்தைய காலத்தில் சிக்கிம் விவசாயிகள் தங்கள் நிலப்பிரபுக்களுக்கு செலுத்திய பல்வேறு வரி ரசீதுகளின் தொகுப்பும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. தந்தி இயந்திரங்கள், கிராமபோன்கள், பழங்கால பூட்டுகள் மற்றும் சாவிகள், பாத்திரங்கள், வானொலிகள் மற்றும் கடிகாரங்கள் போன்ற பல்வேறு பழங்கால பொருட்களும் போச்ராச்சு மற்றும் சிக்கிமின் முதல் வங்கியான இயெத்முல் வங்கி வழங்கிய வங்கி ரசீது, சிக்கிமின் முதல் செய்தி பத்திரிகையான கஞ்சன்சங்காவின் முழு தொகுதி போன்றவை அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.