இராயக்கோட்டை தெருக்கூத்துக் கலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் இராயக்கோட்டை இங்கு இப்போதும் சிறப்பாக ஆண்டுதோறும் தெருக்கூத்து நடந்துவருகிறது.
கூத்து நடைபெறும் இடம்
தொகுஇராயக்கோட்டையிலிருந்து சூளகிரி சாலையில் உள்ள 1920இல் கட்டப்பட்ட துரோபதியம்மன் கோயில் அருகில். இக்கோயிலின் சார்பில் நடைபெறும் கூத்தைச் சுமார் 20 ஊர்காரர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள்.
கூத்து நடைபெறும் காலம்
தொகுஆண்டுதோறும் வைகாசிமாதம் இங்குக் கூத்து நடக்கிறது. 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. தலைசிறந்த கலைஞர்களைக்கொண்டு 18 நாட்கள் பாரதக் கதையை நாள்தோறும் பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்குப் பிறகு இரவு 10 மணிக்குத் தெருக்கூத்து ஆரம்பமாகிவிடும். இந்த 18 நாளும் பாரதக் கதையைச் சுவைபட கூத்தாக நடிப்பார்கள்[1]
குறிப்புகள்
தொகு- ↑ தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட கருத்தரங்க மலர் 10.11.2009, இராயக்கோட்டை தெருக்கூத்துக் கலை-கவியருவி நாகராசன்.