இராவி பாவிலாய்
வானியல் வல்லுநர் மற்றும் எழுத்தாளர்
இராவி பாவிலாய் (Rawi Bhavilai ) என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வானியல் வல்லுநர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என்ற முகங்களாலும் இவர் அறியப்படுகிறார். பேங்காக் நகரிலுள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் இயற்பியற் துறையில் ஒரு பேராசிரியராக இராவி பாவிலாய் பணிபுரிந்தார். வானியல், தத்துவம் மற்றும் மதம் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து இவர் எழுதிவந்தார். தாய்லாந்து நாட்டின் இராயல் கழகத்தில் உறுப்பினராக இருந்த பாவிலாய் 2006 ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக தேசிய கலைஞர் எனப் பெயரிடப்பட்டார். [1] 2018 ஆம் ஆண்டு பாவிலாயயின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் வலைதளத்தின் கிறுக்கல் எழுத்துகளில் சிறப்பிக்கப்பட்டார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ""ระวี ภาวิไล"ศิลปินแห่งชาติวัย 92 ปี เสียชีวิตอย่างสงบ" (in th). Post Today. 17 March 2017. https://www.posttoday.com/social/general/485602. பார்த்த நாள்: 20 January 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Professor Dr. Rawee Pawilai’s 93rd Birthday". www.google.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.