இரா. தாமரைக்கனி
இரா. தாமரைக்கனி (அக்டோபர் 19, 1946 - செப்டம்பர் 15 2005) தமிழக அரசியல்வாதி. இவர் ஐந்து முறை திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க. சார்பாக எம்.ஜி.ஆர் தலைமையில் மூன்றுமுறையும், சுயேச்சையாக ஒரு முறையும், மீண்டும் அ.தி.மு.க சார்பாக ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ஆண்டுகாலம் அதிமுகவிலும் சில ஆண்டுகள் திமுகவிலும் உறுப்பினராக இருந்தார். இவரது மகன் இன்பத்தமிழன் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1]
இரா. தாமரைக்கனி | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா | 19 அக்டோபர் 1946
இறப்பு | 15 செப்டம்பர் 2005 | (அகவை 58)
பணி | தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை: 1977-1980, 1980-1984, 1984-1989, 1991-1996, 1996-2001) |
பெற்றோர் | இராமசாமி மற்றும் சண்முகத்தாய் |
வாழ்க்கைத் துணை | தேவகி |
பிள்ளைகள் | நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. தாமரைக்கனி காலமானார்". தி இந்து. 15 செப்டம்பர் 2005 இம் மூலத்தில் இருந்து 2006-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060526150345/http://www.hindu.com/2005/09/15/stories/2005091505130500.htm.