இரா. துரைக்கண்ணு

தமிழக அமைச்சர்

ஆர். துரைக்கண்ணு (R. Doraikkannu, 28 மார்ச், 1948 - 31 அக்டோபர், 2020[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் பாபநாசம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பிறகு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், 2016 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைக்கண்ணு நியமிக்கப்பட்டார். இது இவரது முதல் அமைச்சரவை பதவியாகும்.[3]

குடும்பம்தொகு

துரைக்கண்ணு 1948 ஆம் ஆண்டு, மார்ச் 28 இல், தஞ்சை மாவட்டம் இராஜகிரியில் பிறந்தார். இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். [4] இவருக்கு பானுமதி என்கிற மனைவியும், சிவ.வீரபாண்டியன், சண்முகபிரபு ஆகிய 2 மகன்களும், தமிழ்செல்வி, வெண்ணிலா, சத்தியா, நீலாவதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.

இறப்புதொகு

கொரோனா தொற்றால், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அக்டோபர் 31, 2020 அன்று இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. "துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்". பிபிசி தமிழ் (அக்டோபர் 31, 2019)
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. 2017-04-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". The Hindu. 21 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/list-of-ministers-in-jayalalithaa-cabinet/article8630370.ece. பார்த்த நாள்: 2017-05-04. 
  4. "Thiru. R. Doraikkannu (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  5. "துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்".பிபிசி தமிழ் (அக்டோபர் 31, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._துரைக்கண்ணு&oldid=3354277" இருந்து மீள்விக்கப்பட்டது