இரா. தேசிகன்
இரா. தேசிகன் (1933-27.6.1015) நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தப் பாடுபட்டவர்.[1]
வாழ்க்கை
தொகுதந்தை பெயர் இராகவாச்சாரி, தாயார் ரங்கநாயகி. திருவரங்கத்தில் பிறந்து, 13வயதுவரை திருநெல்வேலி மாவட்டம், தேசமாணிக்கம் என்ற இடத்தில் வளர்ந்தார். சென்னை கிருத்தவ கல்லூரியில் பி.ஏ. சேர்ந்தும் பணவசதி இல்லாததால் அவரது கல்வி இண்டர் மீடியட்டோடு நின்று போனது.
பணிகள்
தொகு1974 இல் ’இண்டியன் நீடில் உமன்’, ’இண்டியன் குக்கரி’ இதழ்களைத் தொடர்ந்து, ’இண்டியன் அவுஸ் ஒய்ப்’ பத்திரிகையைத் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார். 1977இல் முதன் முதலாகப் பெண்களுக்கு என மங்கையர் மலர் இதழை ஆரம்பித்தார். பின்பு அதை கல்கி குழுமம் வாங்கியது.
நுகர்வோர் பணிகள்
தொகு1989 முதல் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். 1991ஆம் ஆண்டு டிசம்பரில் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பை (FEDCOT) நிறுவி அதன் தலைவரானார். தொடக்கத்தில் 17 சங்கங்கள் இதில் சேர்ந்தன. பிறகு அதன் எண்ணிக்கை 250 தாண்டியது. நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தியுள்ளார். நுகர்வோர் சிக்கல்கள் தொடர்பாகப் பல்வேறு புத்தகங்களை எழுதியதுடன், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார்.[2]