இரிச்சர்டு உகு சுட்டாய்

பிரித்தானிய வானியலாளர்

இரிச்சர்டு உகு சுட்டாய் (Richard Hugh Stoy) (1910–1994) ஓர் இருபதாம் நூற்றாண்டு பிரித்தானிய வானியலாளரும் பிரித்தானியப் பேரரசாணை பெற்றவரும் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும்FRSSAS தென்னாப்பிரிக்கா அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் ஆவார், இவர் தென்னாப்பிரிக்கப் பணிகளுக்காக பெரிதும் நினிவுகூரப்படிகிறார். இவரைத் திக் சுட்டாய் என இவரது நண்பர்கள் அழைக்கின்றனர்.

வாழ்க்கை

தொகு
 
பழைய கேப் வான்காணகம்
 
இரவில் எடின்பர்கு வான்காணகம்
 
தென்னாப்பிரிக்க வானியல் கழகம் தந்த கில் பதக்கம்

இவர் 1910 ஜனவரி 31 இல் வுல்வர்காம்ப்டனில்பிறந்தார். இவர் உகு விக்டர் சுட்டீவன் சுட்டாய்க்கும் அவரது மனைவி எல்லென் பிரான்சிச்ய் சான்னிங்குக்கும் ஐந்தாம் மகனாகப் பிறந்தார். இவர் வுல்வர்காம்ப்டன் இலக்கணப் பள்ளியில் படித்தார். இங்கே இவரது கணித ஆசிரியர் இவரை வானியலுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.[1]

இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கோன்வில்லி, கியசு கல்லூரியில் இடம்பிடித்தார். இங்கு பேரா. ஆர்த்தர் எடிங்டனிடமும் பேரா. எஃப். ஜே. எம். சுட்டிரேட்டனிடமும் வானியலைப் ப்யின்றார். இவருரோடெரிக் ஆலிவர் இரெடுமனிட்ம் ஒளிப்பட ஒளியளவியலைக் கற்றார். இவர் த்ன் முதல் முனைவர் ப்ட்டத்தை 1924 இல் பெற்றார். பின்னர், பொதுநலவாய கல்விநல்கையின் கீழ் சிலகாலம் இலிக் வான்காணகத்தில் இருந்தார்.

இவர் 1935 இல் கேப் வான்காண்கத்தில் ஜான் ஜாக்சனுக்கு முதன்மை உதவியாளராக பணியமர்த்தப்பட்டார். இவர் 1950 இல் இயக்குராரகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 1945/6 இல் தென்னாப்பிரிக்க வானியல் கழகத் தலைவ்ரானர். இவர் 1965 இல் கில் பதக்கத்தை வென்றார். இவருக்கு 1957 இல் பிரித்தானியப் பேரரசணை வழ்ங்கப்பட்டது.[2]

இவர்1968 இல் எடின்பர்கு வான்காணக இணை இயக்குநராக எடின்பர்கு நகருக்குச் சென்றார். இவர் 1970 இல் எடின்பர்கு அரசு கழகத்தில் ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்காக முன்மொழிந்தவர்கள் உகு ஏ. குரூக், வால்டேர் சுட்டிபுசு, எம். ஜே. சுமித்து, உகு எர்னெசுட்டு பட்லர் ஆகியோர் ஆவர்.[3]

ஒராண்டு உடல்நலமில்லாததால், இவர் 1975 இல் ஓய்வு பெற்ரார் இவர் எடின்பர்கில் 1994 நவம்பர் 8 இல் இறந்தார். இவரின் அடக்கப்பணிகள் கேசில் தெரேசில் உள்ள புனித மாற்கு ஒன்றிப்பு பேராயத்தில் நிகழ்ந்தேறின.[4]

குடும்பம்

தொகு

இவர் 1940 இல் கேப்டவுனில் உள்ளூர் ஆசிரியான மேரி பிரவுன் ஜான்சுட்டோனை மணந்தார். இவர்களுக்கு பிரான்சிசு ஆன்னி சுட்டாய்(மகள்), இராபெர்ட் அதிரியான் சுட்டாய்(மகன்) கியோர்கினா வய்லெட் சுட்டாய்(கில்லி)(மகள்) என மூன்று குழந்தைகள் உண்டு.[5]

வெளியீடுகள்

தொகு
  • அனைவருக்குமான வானியல் (1974)

மேற்கோள்கள்

தொகு
  1. Cousins, A. W. J.; Glass, I. S.; Thomas, Y. Z. R. (1995). "Richard Hugh Stoy(1910-1994): Obituary". Monthly Notes of the Astronomical Society of South Africa 54: 19. Bibcode: 1995MNSSA..54...19C. 
  2. "1995MNSSA..54...19C Page 21".
  3. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-902-198-84-X. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-09-27. {{cite book}}: More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  4. "1995MNSSA..54...19C Page 21".
  5. http://adsbit.harvard.edu//full/1995MNSSA..54...19C/0000020.000.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிச்சர்டு_உகு_சுட்டாய்&oldid=3955112" இலிருந்து மீள்விக்கப்பட்டது