இரிபாப் (Rebab) ( அரபு மொழி: ربابة‎ ) இரிபாபா, இருபாப், இரெபெபா, இரிபாப், இரெபிபா, என பலவிதமாக உச்சரிக்கப்படும் கம்பி இசைக் கருவியாகும். இது வடக்கு ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இசுலாமிய வணிகப் பாதைகள் வழியாக சுதந்திரமாக பரவியது.[1] கருவி பொதுவாக வளைவாக இருக்கும். இது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பகுதியில் பெயரிடப்பட்ட முதன்முதலில் அறியப்பட்ட வளைந்த கருவிகளில் ஒன்றாகும். மேலும் இது பல வளைந்த மற்றும் கம்பி வாத்தியங்களில் முதன்மையானதாக உள்ளது.

Rebab tiga tali
செயின்ட் சிசிலியாஸ் - ரெபாப் 1970
3 string instruments
செயின்ட் சிசிலியாஸ் -1900 தயாவ்
பிரபல இந்தோனேசிய ரெபாப் கலைஞர் நோட்டோப்ரோஜோ
ஈராக்கிய ஜாவ்சா கலைஞர் சாலிஹ் ஷெமாயில்

தோற்றம் தொகு

ரெபாப் அதன் பரந்த விநியோகத்துடன் தொடர்புடைய பல்வேறு வகையான இசைக் குழுக்கள் மற்றும் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் சற்றே வித்தியாசமாக கட்டமைக்கப்பட்டு இசைக்கப்படுகிறது. ஈரானில் அகுவாசு என்பது வியோல் காம்பாவைப் போன்ற ஒரு பெரிய கருவியாகும். அதேசமயம் மேற்கில் பயன்படுத்தப்படும் கருவி தோற்றம் சிறியதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும்.

வரலாறு தொகு

இரிச்சர்ட் வாலாசெக்கின் கூற்றுப்படி, வளைந்த ரெபாப் முகமதிய கலாச்சாரத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.[2] அரேபிய பெடோயின் இசையில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ஜோஹன் லுட்விக் பர்கார்ட் தனது பயண இலக்கியாமான டிராவல்ஸ் இன் அரேபியாவில் குறிப்பிடுகிறார்:[3]

இது ஈராக்கில் "ஜோசா" என்று அழைக்கப்படுகிறது. இது தேங்காய் மட்டையால் செய்யப்பட்து. பாரசீக இசையில் கமஞ்சே என்ற வளைந்த கருவியும் உள்ளது. இது ஒத்த வடிவம் மற்றும் அமைப்பைக் கொண்டுள்ளது. இது இசுலாமிய வர்த்தக வழிகள் மூலம் தென்கிழக்கு ஆசியா உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பரவியது.[4]

ஹசான் எக்ஸார் செனானி பிரபல ஈரானிய பாடகரும் ரெபாப் கலைஞருமாவார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிபாப்&oldid=3774962" இலிருந்து மீள்விக்கப்பட்டது