இரிமா படலோவா
இரீமா படலோவா (Rima Batalova) உருசியாவைச் சேர்ந்த இவர் ஒரு இணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள விளையாட்டு வீரராவார். முக்கியமாக இவர் டி 12 வகைப்பாட்டில் நடுத்தர தூர நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். அட்லாண்டா (1996), சிட்னி (2000), ஏதென்ஸ் (2004) பெய்ஜிங் (2008) ஆகியவற்றில் நடந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மூலம் பல்வேறு உலக மற்றும் ஐரோப்பியப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2018 | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | உருசியா |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
நாடு சோவியத் ஒன்றியம் | ||
1988 சியோல் | 400 மீ - பி2 | |
1988 சியோல் | 800 மீ - பி2 | |
1988 சியோல் | 100 மீ - பி2 | |
நாடு ஒருங்கிணைந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது | ||
1992 பார்செலோனா | 200 மீ - பி2 | |
1992 பார்செலோனா | 400 மீ - பி2 | |
1992 பார்செலோனா | 800 மீ - பி2 | |
1992 பார்செலோனா | 500 மீ - பி2 | |
1992 பார்செலோனா | 100 மீ - பி2 | |
நாடு உருசியா | ||
1996 அட்லான்டா | 400 மீ - டி11 | |
1996 அட்லான்டா | 800 மீ - டி10-11 | |
1996 அட்லான்டா | 500 மீ - டி10-11 | |
அட்லான்டா | 3000 மீ - டி10-11 | |
2000 சிட்னி | 800 மீ - டி12 | |
2000 சிட்னி | 1500 மீ - டி12 | |
2000 சிட்னி | 5000 மீ - டி12 | |
2004 ஏதென்ஸ் | 800 மீ - டி12 | |
2004 ஏதென்ஸ் | 1500 மீ - டி12 |
தனது விளையாட்டு வாழ்க்கையில் 100 முதல் 5000 மீட்டர் வரையிலான அனைத்து தூரங்களையும் வெற்றிகரமாக ஓடியுள்ளார். இணை ஒலிம்பிக்கில் இவர் 17 பதக்கங்களைப் பெற்றுள்ளார். அவற்றில் 13 தங்கம் அடங்கும். 2000 ஆம் ஆண்டு முதல் இவர் உருசிய இணை ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார். இவரது விளையாட்டுத் தகுதிக்காக இவர் மாநிலத்திலிருந்தும் தனது நகரத்திலிருந்தும் ஏராளமான கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
சுயசரிதை
தொகுசோவியத் ஒன்றியத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே பார்வைக் குறைபாடுள்ள இவர், எகடெரின்பர்க் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறைகளில் பட்டம் பெற்றார்.
விளையாட்டுகள்
தொகுஇவர் ஆறு இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டு கோடைகால இணை ஒலிம்பிக்கில் சோவியத் ஒன்றிய அணியின் ஒரு பகுதியாக இவர் முதலில் போட்டியிட்டார். அதில் இவர் 1500 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 300 மீட்டரில் வெண்கலமும் வென்றார். 1992 ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் ஒருங்கிணைந்த அணியின் தடகள தூதுக்குழுவின் ஒரு பகுதியாக போட்டியிட்டு 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீட்டர் ஓட்டங்களில் மேலும் நான்கு தங்கப் பதக்கங்களையும் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியையும் வென்றார். 1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அடுத்த இரண்டு போட்டிகளில் இவர் தோல்வியுற்றார். இதில் 800 மீட்டர், 1500 மீட்டர் உட்பட மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இவர் 800 மீ, 1500 மீட்டர் போட்டிகளில் மட்டுமே போட்டியிட்டார். ஆனால் 2004 ஆம் ஆண்டில் ஒரு வெள்ளியையும், வெண்கலத்தையும் மட்டுமே பெற்றார். 2008 ஆம் ஆண்டில் இறுதியில் 13 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலங்கள் என இவரது கணக்கில் இருந்தது. [1] [2]
அரசியல்
தொகுஅரசியலில் நுழைந்த இவர், 2016 முதல் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார். நாட்டில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதையும், உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் மற்றும் பயன்பாட்டினைப் பற்றி கவனம் செலுத்துகின்றார்.