இரீடெரைட்டு-(Y)

கார்பனேட்டு-புளொரோசல்பேட்டு வகை கனிமம்

இரீடெரைட்டு-(Y) (Reederite-(Y)) என்பது ஓர் அரிய இட்ரியம் கனிமமாகும். (Na,Mn,Fe)15(Y,REE)2(CO3)9(SO3F)Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. புளோரோசல்போனேட்டு வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள புளோரோசல்பேட்டு கனிமங்களில் அறியப்பட்டுள்ள ஒரே கனிமம் இரீடெரைட்டு மட்டுமேயாகும். மூலக்கூற்று வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள "REE" என்பது இட்ரியத்தை தவிர இடம்பெற்றுள்ள மற்ற அரு மண் தனிமங்கள் என்பதைக் குறிக்கிறது. சீரியம், நியோடிமியம், டிசிப்ரோசியம், இலந்தனம், எர்பியம் போன்றவை பெரும்பாலும் இங்கு இடம்பெறுகின்றன. இதேபோல மூலக்கூற்று வாய்ப்பாட்டில் பின்னொட்டாகச் சேர்க்கப்படும் (Y) என்பது தொடர்புடைய தளத்தில் இட்ரியத்தின் ஆதிக்கம் அதிகம் என்பதைக் குறிப்பிடுகிறது. கனிமங்களில் அரிதாகக் காணப்படும் P6 என்ற இடக்குழுவுடன் அறுகோணப் படிகத் திட்டத்தில் இரீடெரைட்டு-(Y) கனிமம் படிகமாகிறது. [2][1][3]

இரீடெரைட்டு-(Y)
Reederite-(Y)
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடு(Na,Mn,Fe)15(Y,REE)2(CO3)9(SO3F)Cl
இனங்காணல்
நிறம்மஞ்சள் முதல் ஆரஞ்சுப்பழுப்பு
படிக அமைப்புஅறுகோணப் படிகத்திட்டம்
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Reederite-(Y): Reederite-(Y) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  2. Grice, J.D., Gault, R.A., and Chao, G.Y., 1995. Reederite-(Y), a new sodium rare-earth carbonate mineral with a unique fluorosulfate anion. American Mineralogist 80, 1059-1064
  3. "Reederite-(Y)" (PDF). Handbookofmineralogy.org. Archived from the original (PDF) on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரீடெரைட்டு-(Y)&oldid=3593464" இலிருந்து மீள்விக்கப்பட்டது