இரீனா அமிரி
இரீனா அமிரி (Rina Amiri) ஆப்கானித்தானில் பிறந்த ஒரு செயற்பாட்டு ஆர்வலர் ஆவார். ஆப்கானியப் பெண்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரீனா அமிரி Rina Amiri | |
---|---|
பிறப்பு | ஆப்கானித்தான் |
தேசியம் | ஆப்கானித்தான் |
வாழ்க்கை
தொகுஅமிரி ஆப்கானித்தானில் பிறந்தார், ஆனால் நான்கு வயதாக இருந்த போது அகதியானார். இவரது பெற்றோர் ஆப்கானித்தானில் இருந்து கைபர் கணவாய் வழியாக பாக்கித்தானுக்கு இரகசியமாக சென்றனர். தந்தை ஒரு மருத்துவராக இருந்தார், தாயார் ஒரு வங்கியில் வேலை செய்தார்.[1]
இந்தியாவின் தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரசுதா மகளிர் கல்லூரியில் அரசியல் அறிவியல் படித்தார். பட்டம் பெற்ற பிறகு, செருமனியின் ரூர்-போச்சம் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள வெசுட்டர்ன் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், பயன்பாட்டு பொருளாதாரத்தில் தனது இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார் [2]
இயான் கெர்ரி அமிரி படிக்கும் இடத்திற்குச் சென்றபோது அமிரியின் வாழ்க்கை மாறியது. எழுந்து நின்று ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். "நம் முடி மற்றும் தோலின் நிறம் நம் இதயத்திலும் மனதிலும் உள்ளதைப் பிரதிபலிக்காது என்றார். ஆப்கான் மக்கள் தாலிபான்கள் அல்ல. தாலிபான்களின் முதல் பலி ஆப்கான் மக்கள் ஆவர்." [1] அமெரிக்கரான இவர் ஆப்கானித்தானில் ஒரு நிபுணர் என்று அறியப்பட்டார். நேர்காணல் செய்யப்பட்டு இவரது விவரக்குறிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இவது கருத்துகள் மேற்கோள் காட்டப்பட்டன. கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்சு பத்திரிகையில் வெளிவந்தது .[1]
2015 ஆம் ஆண்டில் இரிச்சர்டு ஒல்புரூக்கின் வாழ்க்கையைப் பற்றிய தி டிப்ளமேட் என்ற திரைப்படத்தில் தோன்றினார்.[3]
2017 ஆம் ஆண்டில் இவர் கொள்கைக்கான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, ஆப்கானித்தானின் நிதியமைச்சகத்தில் ஒரு பெண்ணுக்காக வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவியை ஏற்றுக்கொண்வரானார். இப்பதவியில் 2020 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[2]
29 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ஆப்கானித்தான் பெண்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதராக அமரியை நியமிப்பதாக அறிவித்தார். ஆளும் தலிபான்களால் நாட்டில் பெண்கள் அடக்குமுறை அதிகரித்து வருவதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tufts Journal: Features: Afghan activist". tuftsjournal.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ 2.0 2.1 "Naheed Sarabi". Brookings (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-29.
- ↑ Robbins, Caryn. "Documentary THE DIPLOMAT to Debut Exclusively on HBO, 11/2". BroadwayWorld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-30.
- ↑ "Rina Amiri Named US Special Envoy for Afghan Women, Girls, and Human Rights". VOA News. பார்க்கப்பட்ட நாள் 29 December 2021.