இருகுளோரோபீனால்
இருகுளோரோபீனால்கள் (Dichlorophenols) என்பவை C6H4Cl2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு சகப்பிணைப்பு குளோரின் அணுக்களைக் கொண்டிருக்கும் பீனாலின் கரிமகுளோரைடு எதுவாக இருந்தாலும் அவை இருகுளோரோபீனால்கள் எனப்படும். இதன் அமைப்பின் அடிப்படையில் ஆறுவகையான மாற்றியன்கள் காணப்படுகின்றன.
- 2,3- இருகுளோரோபீனால்
- 2,4- இருகுளோரோபீனால்
- 2,5- இருகுளோரோபீனால்
- 2,6- இருகுளோரோபீனால்
- 3,4- இருகுளோரோபீனால்
- 3,5- இருகுளோரோபீனால்
பொதுவாகக் களைக்கொல்லி என்றழைக்கப்படும் 2,4-இருகுளோரோபீனாக்சியசிட்டிக் அமிலம் போன்ற சிக்கலான வேதிச்சேர்மங்களைத் தயாரிக்கும்போது இருகுளோரோபீனால்கள் இடைநிலைப் பொருளாகப் பயன்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chlorophenols (CP) and Dichlorophenols (DCP)". Archived from the original on 2016-12-19. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.