இருங்குன்றம்

இருங்குன்றம் என்பது இக்காலத்தில் அழகர்கோயில் என வழங்கப்படுகிறது.
மதுரையிலுள்ள மீனாட்சிக்குச் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் சீர் கொண்டுவந்த பின் வைகை ஆற்றில் இறங்குவதாகக் கொண்டாடப்படும் திருவிழா இந்த இருங்குன்றப் பெருமாளோடு தொடர்புடையது.

சங்க காலப் புலவர் இளம்பெருவழுதி பாடிய பரிபாடலில் இக்குன்றத்துத் திருமால் போற்றிப் பாடப்பட்டுள்ளார். [1]
அதில்

அரிதுபெறு துறக்கம் ஏய்க்கும் மாலிருங்குன்றம்,
சிலம்பாறு அணிந்த சீர்கெழு திருவின் சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்,
இருங்குன்று எனப் பெயர் பெற்றது,
கேழிருங் குன்று,
பெரும்பெயர் இருவரை

என்றெல்லாம் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார்.

அடிக்குறிப்பு

தொகு
  1. பரிபாடல் 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருங்குன்றம்&oldid=938484" இலிருந்து மீள்விக்கப்பட்டது