திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருநின்றவூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும்.இத்தலத்தின் மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை.[1]
பெரிய பு ராணம் பாடல் பெற்ற திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநின்றவூர் |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இருதயாலீஸ்வரர் |
தாயார்: | மரகதாம்பிகை |
தல விருட்சம்: | இலுப்பை |
சிறப்பு திருவிழாக்கள்: | பஞ்சமூர்த்தி புறப்பாடு ஆரூத்ரா |
பாடல் | |
பாடல் வகை: | பெரிய பு ராணம் |
பாடியவர்கள்: | சேக்கிழார் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
நிறுவிய நாள்: | 7 ஆம் நூற்றாண்டு |
வரலாறு
தொகுஇக்கோயில் உள்ள திருநின்றவூரானது அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பூசலார் வாழ்ந்த ஊராகும். பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சியில் கைலாச நாதருக்கு ஒரு கோயில் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதற்கான பணிகளில் ஈடுபடுகிறான். கைலாசநாதருக்கு இராஜசிம்மன் கோயில் கட்ட முனைந்திருப்பதை அறிந்ந பூசலாருக்கு தாமும் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை உருவாகிறது. பொருள் வளம் இல்லாத இவர் தம்முடைய உள்ளத்துக்குள்ளேயே ஒரு கோயில் கட்டத் தீர்மானிக்கிறார். இதன்படி பூசலார். இராஜசிம்மன் கோயில் கட்டக் கால்கோள் செய்த அன்றே, இவரும் தன் மனத்துள் கட்டும் கோயிலுக்குக் கால்கோள் நடத்துகிறார். மன்னன் கோயில் கட்ட கட்ட இவரும் தன் மனதில் கோயில் கட்டுகிறார்.
இராஜசிம்மன் கோயில் கட்டி முடிந்ததும் கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்ய நாள் குறிக்கிறான். அதே நாள் அதே முகூர்த்தத்தையே பூசலார் தாம் கட்டிய கோயிலிலும் இறைவன் பிரதிஷ்டைக்குக் குறித்துக் கொள்கிறார். அரசனது கனவில் கைலாசநாதர் தோன்றுகிறார். மன்னனைப் பார்த்து, நீ கட்டும் கோயில் பிரதிஷ்டைக்கு வர இயலாது இதைவிட பெரிய கோயிலாக பூசலார் எனபவர் திருநின்றவூரிலே கட்டி வருகிறார். நான் அங்கு செல்ல வேணுமே. ஆதலால், உன் கோயில் பிரதிஷ்டையை இன்னொரு நாளைக்கு மாற்றி வைத்துக் கொள்ளேன்' என்று சொல்கிறார்.
விழித்தெழும் மன்னன் அமைச்சர்களிடம் பூசலார் கட்டிவரும் கோயில் குறித்து கேட்கிறார். ஆனால் யாருக்கும் தெரியவில்லை எனவே திருநின்றவூர் நோக்கி புறப்படுகிறார். அமைச்சர்களும் அரசனைத் தொடர்ந்து செல்கிறார்கள். அங்கே கோயில், பிரதிஷ்டை. என்ற ஒன்றையும் காணவில்லை. ஊர் மக்களிடம் பூசலார் குறித்து விசாரித்து அவரைக் காண செல்கின்றனர். அவரை அணுகி, நீர் கட்டியிருக்கும் கோயில் எங்கே?' என்று கேட்கிறான், ராஜசிம்மன். அவர் தம் உள்ளத்திலே கோயில் கட்டிய கதையையும் அதில் பிரதிட்டை நடந்த விதத்தையும் கூறுகிறார். அரசன் பூசலார் அடியில் வீழ்ந்து, 'அன்பரே! இறைவன் நான் பொன்னாலும் மண்ணாலும் கட்டிய கலைக் கோயிலை விட, உம்முடைய மனக் கோயிலே பெரிது என்று உவந்து, உம் கோயில் பிரதிஷ்டைக்கே வந்திருக்கிறார்,' என்று கூறுகிறான்.
கோயில்
தொகுஇவாறு பூசலாரின் இந்த மனக் கோயிலின் நினைவாக பின் வந்தவர்கள் கட்டிய கோயிலே இந்த இருதயாலய ஈசுவரர் கோயிலாகும். இருதயாலய ஈசுவரர் கோயில் ஒரு சிறிய கோயிலாகும். இத்தல இறைவன் பெயர் இருதயாலய ஈசுவரர். அம்மனின் பெயர் மரகதாம்பிகை. கோயிலில் கருவறைக் குள்ளேயே பூசலாரும் சிலை உள்ளது. இந்தக் கோயிலில் செப்புச் சிலை வடிவிலும் பூசலார் இருக்கிறார். மேலும் இக்கோயிலில் நால்வர், சோமாஸ்கந்தர், பிட்சாடனர், மோகினி வடிவில் மகா விஷ்ணு போன்ற தெய்வங்களும் உள்ளன.
திருவிழாக்கள்
தொகுமகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், மகாசங்கராந்தி, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, சித்திரை ஆண்டுப் பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை.
தலச் சிறப்பு
தொகுசிவனின் மூலஸ்தானத்தில் பூசலார் நாயனாரின் சிலை உள்ளது.
கோவிலின் அமைப்பு
தொகு- சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார்.
- அம்மன் தெற்கு நோக்கி உள்ளார்.
- இருவருக்கும் தனிதனி சன்னதிகள் உள்ளது.
- சுவாமியின் விமானம் கஜபிஷ்டம் அமைப்பில் தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது.
- சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேசவர் சன்னதிகள் உள்ளன.
வேண்டுதல்
தொகுஇருதய நோய் குணமாக வேண்டி இங்கு வேண்தல் செய்கின்றனர். [2]
பெரிய புராணத்தில் இடம்பெற்ற பாடல்
தொகு- நீண்ட செஞ் சடையனார்க்கு நினைப்பினால் கோயிலாக்கி
- பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொற்றாள் போற்றி
- நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
- நன்றுநீ டாலயத்து நாளை நாம் புகுவோம் நீயிங்(கு)
- ஒன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொளவாயென்று
- கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்[3]
-சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம்