இருதயோகார்பாக்சிலிக் அமிலம்
இருதயோகார்பாக்சிலிக் அமிலங்கள் (Dithiocarboxylic acids) என்பவை RCS2H என்ற வாய்பாட்டுடன் கூடிய கரிமகந்தகச் சேர்மங்களாகும். இவை கார்பாக்சிலிக் அமிலங்களின் இருதயா சேர்மங்களின் ஒப்புமைகளாகும். RCOSH என்ற வாய்பாட்டுடன் கூடிய மோனோதயோகார்பாக்சிலிக் அமிலங்கள் இவற்றுடன் நெருக்கமாக தொடர்புடைய சேர்மங்களாகும். மேலும், சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட சேர்மங்களின் குடும்பமுமாகும். [1]
இருதயோகார்பாக்சிலிக் அமிலங்கள் மோனோதயோகார்பாக்சிலிக் அமிலங்களை விட சுமார் 3 மடங்கு அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே, இருதயோகார்பாக்சிலிக் அமிலத்திற்கு pKa மதிப்பு = 1.92. ஆகும்:[2] இத்தகைய சேர்மங்கள் பொதுவாக கார்பன் டைசல்பைடு மற்றும் கிரிக்கனார்டு வினையாக்கி ஆகியவற்றை வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகின்றன:[3]
- RMgX + CS2 -> RCS2MgX
- RCS2MgX + HCl -> RCS2H + MgXCl
இந்த வினையானது கிரிக்கனார்டு வினையாக்கி மற்றும் கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்தி கார்பாக்சிலிக் அமிலங்களை உற்பத்தி செய்யும் வினையுடன் ஒப்பிடத்தக்கது ஆகும். இருதயோகார்பாக்சிலேட்டு உப்புகள் எளிதாக கந்தக ஆல்கைலேற்றம் அடைந்து இருதயோகார்பாக்சிலேட்டு எசுத்தர்களைக் கொடுக்கின்றன.
- RCS2Na + R'Cl -> RCS2R' + NaCl
அரைல்யிருதயோகார்பாக்சிலிக் அமிலங்கள், எ.கா., இருதயோபென்சாயிக் அமிலம் குளோரினேற்றம் அடைந்து தயோ அசைல் குளோரைடுகளை கொடுக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Grote, Johanna; Friedrich, Felix; Berthold, Katarína; Hericks, Loreen; Neumann, Beate; Stammler, Hans‐Georg; Mitzel, Norbert W. (2018). "Dithiocarboxylic Acids: An Old Theme Revisited and Augmented by New Preparative, Spectroscopic and Structural Facts". Chemistry – A European Journal 24 (11): 2626–2633. doi:10.1002/chem.201704235. பப்மெட்:29266463.
- ↑ Matthys J. Janssen (1969). "Thiolo, Thiono and Dithio Acids and Esters". In Saul Patai (ed.). Carboxylic Acids and Esters. PATAI'S Chemistry of Functional Groups. pp. 705–764. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470771099.ch15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-77109-9.
- ↑ Ramadas, S. R.; Srinivasan, P. S.; Ramachandran, J.; Sastry, V. V. S. K. (1983). "Methods of Synthesis of Dithiocarboxylic Acids and Esters". Synthesis 1983 (8): 605–622. doi:10.1055/s-1983-30446. https://archive.org/details/sim_synthesis_1983-08_8/page/605.