இருத்தலியல் தீவாய்ப்பு
இருத்தலியல் தீவாய்ப்பு என்பது, பூமியில் தோன்றிய அறிவாற்றல் கொண்ட உயிர்கள் முற்றாக அழிந்துவிடக்கூடிய வகையில் அல்லது எதிர்கால வளர்ச்சியைக் கடுமையான முறையில் நிரந்தரமாகக் குறைக்கும் வகையில் ஏற்படக்கூடிய எதிர்கால நிகழ்வை அல்லது நிலைமையைக் குறிக்கும்.[1] இவை உலகப் பேரழிவுத் தீவாய்ப்பின் தீவிரம் கூடிய ஒரு பகுதியாகும்.
இருத்தலியல் பேரழிவுக்கான சாத்தியக்கூறுகள்
தொகுஇருத்தலியல் நிகழ்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாட்டு நிகழ்தகவு குறித்துப் பல நிறுவனங்கள் எதிர்வு கூறியுள்ளன. விண்கற்கள் மோதுவதனால் அடுத்த நூற்றாண்டில் மனிதகுலம் அழிந்து விடுவதற்கான நிகழ்தகவு ஒரு மில்லியனில் ஒரு பங்கு மட்டுமே[2] என ஓரளவு துல்லியமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனாலும் சில அறிஞர்கள் இதற்கான வாய்ப்பு முன்னர் கணிக்கப்பட்ட அளவிலும் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் எனக் கூறுகின்றனர்.[3] இதுபோலவே, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய காலநிலை மாற்றம் உண்டாக்குவதற்குப் போதிய அளவிலான எரிமலை வெடிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு 50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை எனக் கணிக்கப்பட்டுள்ளது.[4] 69,000 - 77,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட டோபா எரிமலை வெடிப்பு ஏறத்தாழ மனிதகுலத்தை அழித்துவிடக்கூடிய அளவு தீவிரம் கொண்டதாக இருந்தது.[5] பிறவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களின் வாய்ப்புக்களைக் கணிப்பது மிகவும் கடினம். 2008ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற உலகப் பேரழிவுத் தீவாய்ப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பல்வேறு பேரழிவுத் தீவாய்ப்புக்கள் தொடர்பான வல்லுனர்கள், 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலம் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு 19% எனக் கருத்துக் கூறினர். ஆனாலும், மாநாட்டு அறிக்கை மேற்படி கணிப்புக்கு அடிப்படையான முறைசாரா ஆய்வில் இருந்த சில பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவைக் கவனமாகவே அணுகவேண்டும் எனக் கூறியுள்ளது. பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய அழிவு வாய்ப்புக்களின் சுருக்கம் வருமாறு:
தீவாய்ப்பு 2100க்கு முன் மனிதகுலம்
அழிவதற்கான நிகழ்தகவுமூலக்கூற்று நானோதொழில்நுட்ப ஆயுதங்கள் 5% பேரறிவுத்திறன் AI 5% போர்கள் 4% உருவாக்கப்பட்ட தொற்றுநோய்கள் 2% அணுவாயுதப் போர் 1% நானோதொழில்நுட்ப விபத்து 0.5% இயற்கைத் தொற்றுநோய்கள் 0.05% அணுவாயுதப் பயங்கரவாதம் 0.03%
- அட்டவணை மூலம்: மனிதகுல எதிர்காலம் நிறுவனம், 2008.[6]
குறிப்புகள்
தொகு- ↑ Nick Bostrom; Milan M. Cirkovic (29 September 2011). Global Catastrophic Risks. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-960650-4.
- ↑ Matheny, Jason Gaverick (2007). "Reducing the Risk of Human Extinction". Risk Analysis 27 (5).
- ↑ Asher, D.J., Bailey, M.E., Emel’yanenko, V., and Napier, W.M. (2005). Earth in the cosmic shooting gallery. *The Observatory*, 125, 319-322.
- ↑ Rampino, M.R. and Ambrose, S.H. (2002). Super eruptions as a threat to civilizations on Earth-like planets. *Icarus*, 156, 562-569
- ↑ Ambrose 1998; Rampino & Ambrose 2000, pp. 71, 80.
- ↑ உலகப் பேரழிவுத் தீவாய்ப்பு ஆய்வு, தொழில்நுட்ப அறிக்கை, 2008, மனிதகுல எதிர்காலம் நிறுவனம்