இருபதாம் நூற்றாண்டு நாவல்கள்

தொடக்க கால நூல்கள் பல வெளியாயின. அவை உரைநடை காப்பியமாகக் கருதப்பட்டது. இடம், காலம் முதலியவற்றில் விரிவான வருணனைகளும் பாத்திரங்களின் உயர்வு நவிற்சிக்கான உரைநடைக் காப்பியமாகக் கருதப்பட்டது. இடம், காலம் முதலியவற்றின் விரிவான வருணனைகளும் பாத்திரங்களின் உயர்வு நவிற்சியான வருணனைகளும் கதைத் தலைவனும் தலைவியும் தன்னிகரற்றவர்களாகப் படைக்கப் படுதலும் ஆகிய காப்பியத் தன்மைகள் தொடக்கக் காலப் புதினங்களின் இயல்புகளாக அமைந்தன. ‘பிராதப முதலியார் சரிதம்’ என்பது முதல் தமிழ்ப் புதினமாகும். இது வேத நாயகப்பிள்ளை அவர்களால் 1867-ஆம் ஆண்டில் எழுதப் பெற்றது. இவரது இரண்டாவது நாவல் ‘சுகுண சுந்தரி’ என்பது. இவ்விரு நாவல்களும் இன்பமாகவே முடிகின்றன.1893-ல் குருசாமி சர்மா என்பவரால் ‘பிரேமலாவதியம்’ என்ற புதினம் இயற்றப்பட்டது.1896-ல் பரிதிமாற் கலைஞர் அவர்களால் ‘மதிவாணம்’ என்னும் தலைப்பில் நாவல் எழுதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் கிருபை சத்திநாதன் அம்மாள் அவர்களால் ‘கமலம்’ ‘சுகுணா’ என்ற இரு நாவல்களும் இயற்றப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் வெளியாகிய நூல்கள்

இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள்: நடேச சாஸ்திரி

  • தீசையாளு (1900)
  • திக்கற்ற இரு குழந்தைகள் (1902)
  • மதிகெட்ட மனைவி (1903)

மாதவையா

  • பத்மாவதி சபதம்
  • விஜய மார்த்தாண்டம்
  • முத்து மினாட்சி

டி. எம். பொன்னுசாமிப் பிள்ளை • கமலாட்சி • வீர சுதந்திரம் • ஞான சம்மந்தம் • சிவகுமாரன்

டி.பக்தவசலம் • முத்து மாணிக்கம் • முக்த மாலா

ஆரணி குப்புசாமி முதலியார் & வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோர் எழுதிய பல துப்பறியும் நாவல்கள்

எஸ். ஏ. இராமசாமி • சாரதம்பாள் சரிதம்

இந்நாவல்கள் அனைத்திலும் நாவலின் கூறுகளும் அமைப்புகளும் சீரிய முறையில் அமையவில்லை.

நாவல்கள் அவற்றிற்குரிய சீரிய கூறுகளோடுமமைப்புகளோடும் எழுதப்பெற்றன. இந்நாவல் ஆசிரியர்களுள் குறிப்பிடுதற்குரியவர்கள்: கே. ஜி. வெங்கடரமணி இலட்சுமி சுப்பிரமணியம் ஆர். சண்முகசுந்தரம் இலட்சுமி இராஜம் கிருஷ்ணன் சி. என். அண்ணாதுரை என்.சிதம்பர சுப்பிரமணியம் விந்தன் ஜெயகாந்தன் கு. இராஜவேலு நா. பார்த்தசாரதி மு. கருணாநிதி தி. ஜானகிராமன் டாக்டர். மு. வரதராசன் நீலபத்மநாதன் கல்கி இந்திரா பார்த்தசாரதி நாரண் துரைக்கண்ணன் லா.சா. இராமாமிர்தம் இந்நாவல்களில் சமுதாய நாவல், அரசியல், நாவல், வரலாற்று இலக்கிய நாவல், வட்டார நாவல் எனப்பல்வகைப் படுத்தலாம்.

தற்கால தமிழ் நாவல்கள்

தற்காலத் தமிழ் நாவல்¸û பின் நவீனத்துவக் §¸¡ட்பாடுகளின் அடிப்படையில் பெரிதும் படைக்கப்படுகின்றன. நாவல் படைப்பாளிகள் பழைய முறைகளில் கதைகளைச் சொல்லாமல் கதைகளில் மிக ஆழமான செய்திகளையும், யதார்த்தமான நிகழ்வுகளையும் சொல்லுகின்றனர். • தற்கால நாவலாசிரியர்களில் தனித்தன்மை பெற்று நிற்பவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரின் உபபாண்டவம் நாவல்தான் தமிழ் உலகிற்கு அவரை மிகச் சிறந்த நாவலாசிரியராக அடையாளம் காட்டிற்று. • எஸ்.ராமகிருஷ்ணன் மகாபாரதக் கதையையும், நடப்பியல் கால நிகழ்வையும் ஒருங்கிணைத்து இந்நாவலை ஆக்கியுள்ளார். • அவரின் நெடுங்குருதி, உறுபசி ஆகிய நாவல்கள் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவை

ஜெய§Á¡கý • கம்பாநதி • ரெயினீஸ் அய்யர் தெரு கெ.டி.குரூஸ் • ஆழி சூழ் உலகு திலகவதி • கல்மரம் (கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்வியல் பிரச்சனைகû) பாலமுருகன் • §º¡ளகர் தொட்டி (மலைவாழ் மக்களின் துன்பியல் வாழ்க்கை)

இன்றைய தமிழ் நாவல்கள் வடிவங்கள்: • சமூக நாவல்கள் • பெண்ணிய நாவல்கள் • தலித்திய நாவல்கள் • எதார்த்த நாவல்கள் • வட்டார நாவல்கள் • பின் நவீனத்துவ நாவல்கள்

இக்கால தமிழ் எழுத்தாளர்களில் சிலர்: • இந்திரா சௌந்தர்ராஜன் • சாரு நிவேதிதா • சுஜாதா • நாஞ்சில் நாடன் • பாலகுமாரன் • வைரமுத்து • எஸ். ராமகிருஷ்ணன்


இக்காலத்தில் உலகிலேயே மிகுதியாகப் படிக்கப்படும் இலக்கியம் நாவலேயாகும். நாவலின் பொருளாக அமையாத ஒரு மனித சூழ்நிலையும் பொருளும் இல்லை எனலாம்.