இருபிளவுப் பரிசோதனை
இருபிளவுப் பரிசோதனை அல்லது யங் பரிசோதனை என்பது 1801 ம் ஆண்டு யங் அவர்கள் செய்த, ஒளியின் இயல்புகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை சுட்டிய பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனையில் அணுத் துகள்கள் அல்லது ஓரியல் அலைகள் இரு சிறு பிளவுகளுக்கிடையில் செலுத்தப்படும் போது, எதிரில் உள்ளத் திரையில் அலைகளின் குறிக்கீட்டைக் காண முடிகிறது.[1][2][3]
1801 ஆம் ஆண்டில், குறுக்கீடு எனப்படும் அலை இயல்பு, ஒளிக்கும் பொருந்தும் என்று யங் நிரூபித்துக் காட்டினார். இந்தக் குருக்கீடியல்பை, நாம் அன்றாட வாழ்வில், நீரலைகளில் எளிதில் காண முடிகிறது. நீர் நிரம்பிய குளத்திலோ, தொட்டியிலோ, ஒரு கல்லை வீசி எறிந்தால், அவ்விடத்தை மையாமாகக் கொண்டு, பல வட்ட அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி விரிவடைந்து, கரை வரைச் சென்று மோதி முடியும் (கீழே காண்பித்திருப்பது போல்)
<நீர்த்துளி படம்>
உற்றுப் பார்த்தல் இவ்வட்ட அலைகள், நீர்ப் பரப்பின் சம அளவினின்று, மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் பரவிக் கொண்டிருக்கும். மேலெழும்பிய பகுதியின் அதிக பட்ச உயரம் அலைமுடி எனவும், கீழ்த்தாழ்ந்த பகுதியின் குறைந்த பட்ச ஆழம் அலையடி எனவும் அழைக்கப் படுகின்றன.
<மேலெழும்பியும்-கீழ்தாழ்ந்தும் படம்>
மேலும், ஒரே நேரத்தில் இரண்டு கற்களை அருகாமையில் எறிந்தால், முதற்கல்-மைய வட்ட அலைகளும், இரண்டாம் கல்-மைய வட்ட அலைகளும் மோதி நின்றோ, ஓடிந்தோ விடாமல் ஒன்றன் மீது ஒன்றாகப் பரவும்.
<இரண்டு கல் படம்>
கூர்ந்து கவனிக்கையில், முதற்கல்லின் தோன்றிய அலைமுடியும், இரண்டாம் கல்லின் தோன்றிய அலைமுடியும் சந்திக்கையில், அவை கூடி, மொத்த அலைமுடி இரு மடங்காக உயரும். அதே போல், அலையடிகள் சந்திக்கையில், மொத்த அலையடி இருமடங்காகத் தாழும். ஆனால், ஒரு அலைமுடியும், அலையடியும் சந்திக்கையில், அவை ஒன்றோடொன்று கழிந்து, நீர்ப் பரப்பின் சம அளவிற்கு வந்து விடும். இப்படிப்பட்ட அலைகளின்
கூடுதல்-ஆழிதல் நிகழ்வையே குறுக்கீடு என அழைக்கிறோம்.
<அலைமுடி அலையியாடி கூடுதல் படம்>
இரண்டு கரகளிக் கொண்டு நாம் உருவாக்கிய குருக்க்கிட்டுப் படிவத்தை, ஒரு கல்லையும், இரு கீற்றுக்களையும் கொண்டும் உருவாக்கலாம்.
குவாண்டம் இயற்பியலில் இந்தப் பரிசோதனை ஒளியின் பிரிக்கமுடியாத அலை துகள் இயலைக் காட்டுகிறது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ Young, Thomas (1804). "The Bakerian lecture. Experiments and calculation relative to physical optics.". Philosophical Transactions of the Royal Society of London 94: 1–16. doi:10.1098/rstl.1804.0001.
- ↑ Kipnis, Naum S. (1991). History of the Principle of Interference of Light. Springer. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780817623166.
- ↑ Lederman, Leon M.; Christopher T. Hill (2011). Quantum Physics for Poets. US: Prometheus Books. pp. 102–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1616142810.