இருமையப் பண்பகத்திரி
இருமையப் பண்பகத்திரி (dicentric chromosome) என்பது கதிர் வீச்சின் தாக்கத்தால் ஏற்படும் பல விளைவுகளில் ஒன்று. பண்பகத்திரியில் ஏற்படும் முறிவு காரணமாக அடுத்தடுத்து காணப்படும் குரோமசோம்களின் முறிந்த பகுதிகள் இணைவதால் இப்படிப்பட்ட இரு மையங்களுடன் கூடிய அசாதாரண பண்பகத்திரிகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறு தோன்றும் இரு மையப் பண்பகத்திரிகள் அயனியாக்கும் கதிர்களின் ஆற்றலையும் ஆற்றல் வீதத்தினையும் பொறுத்திருக்கின்றன. ஆற்றல் கூடும் போது இரு மையப் பண்பகத்திரிகளும் அதிகரிக்கின்றன. ஏற்பளவு வீதம் கூடும் போதும் இது அதிகரிக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nussbaum, Robert; McInnes, Roderick; Willard, Huntington; Hamosh, Ada (2007). Thompson & Thompson Genetics in Medicine. Philadelphia(PA): Saunders. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-3080-5.
- ↑ Hartwell, Leland; Hood, Leeroy; Goldberg, Michael; Reynolds, Ann; Lee, Silver (2011). Genetics From Genes to Genomes, 4e. New York: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780073525266.
- ↑ Lynch, Sally (1995). "Kabuki syndrome-like features in monozygotic twin boys with a pseudodicentric chromosome 13". J. Med. Genet. 32 (32:227–230): 227–230. doi:10.1136/jmg.32.3.227. பப்மெட்:7783176.