இரும்புத் தாது

இரும்புத் தாது என்பது இரும்பைப் பிரித்தெடுக்கக் கூடிய பாறை அல்லது கனிமம் ஆகும். இந்த தாதுக்களில் பொதுவாக இரும்பு ஆக்சைடுகள் அதிகமாக காணப்படுகிறது. இத்தாதுக்கள் அடர் சாம்பல், வெளிரிய மஞ்சள், துருப்பிடித்த சிவப்பு நிறத்தில் மற்றும் ஆழ்ந்த ஊதா நிறங்களில் காணப்படுகிறது. இரும்பு தாது பொதுவாக மேக்னடைட் (Fe3O4), ஹமட்டைட் (Fe2O3), ஜியொதைட்(FeO (OH)), லிமோனைட்டு (FeO (OH). N (H2O)) அல்லது சிடரைட்(FeCO3) போன்ற நிலைகளில் காணப்படுகிறது. அதிகமாக மேக்னடைட், ஹமட்டைட் (60% மேல்) கொண்டுள்ள தாதுவை இயற்கை தாது என்று அழைக்கப்படுகிறது. இத்தாதுவை நேரடியாக இரும்பு தயாரித்தலில் போது ஊதுலைகளில் பயன்படுத்தலாம். இரும்பு தாது, கசடு இரும்பு தயாரிக்க தேவையான மூலப்பொருளாகும். கசடு இரும்பு எஃகு தயாரிப்பின் மூலப்பொருளாகும்.

ஹமட்டைட்
இரும்பு தாது சிறுநிரல் தொகுப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புத்_தாது&oldid=1943539" இருந்து மீள்விக்கப்பட்டது