இருள்வ மௌத்திகம்

இருள்வ மௌத்திகம் எழுத்தாளர் கோணங்கி எழுதிய குறுநாவல் மற்றும் கதைகளின் தொகுப்பு.

இருள்வ மௌத்திகம்
நூலாசிரியர்கோணங்கி
வகைநாவல், குறுநாவல்
வெளியீட்டாளர்தெந்திசைப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு டிசம்பர் 2007

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை:

I. இதுவரைத் தன் நூலைப் படித்து - முடித்து - இராத வாசகனின் குறிப்புகள்

அ) தேய்ந்தால் வளரும் கலை வளர்ந்தால் தேயும் கலை
ஆ) ஒரு கதை சொல்பவன் மற்றொரு கதை சொல்லியை விரும்ப மாட்டான்.
இ) கதை தன் சொல்லியை விரும்பமாட்டாள்

II. கதாந்தகம்

1. இருள்வ மௌத்திகம் 2. புலிக்குகை நாயனம் 3. அலையும் கண்ணாடியுள் ரஸவாதி 4. வெள்ளரிப் பெண் 5. திறந்த விழிகளோடு தூங்கும் ஸ்திரிகள் 6. மண் சிலம்பை 7. மோன இழை

III. குறுநாவல்

1. தழும்புகள் சிவந்த அணங்குநிலம்

IV. நேர்முகம்

1. தன்னுடன் தன் உரையாடல்

பின்னுரையிலிருந்து தொகு

"வனச்சாம்பல் பூக்களாக உருமாறி நில வாசனைகளை அடுத்த காலத்திற்கு அப்பால் உள்ள கல்வீடுகளின் இருபக்க யோனிகளில் அருவிபாயும் தொனி மறைவாய் கேட்கிறது. உள்ளிருப்பவர் யாவரும் நிழல்களின்றி இருந்தார்கள். கூட வருபவர்கள் யாருமின்றி கொற்றவைச் சுடர் விளக்கிற்கருகில் மான்கூட்டம் உறங்க அவற்றோடு மந்திகள் பாறைகளில் துயில வெம்பரப்பான அவாந்தரவெளி மூடிய தருணம். வேடர் மரங்கடைந்த கொற்றவைச் சிற்பங்களின் திருகிய சுடர் மேவும் வெளிச்சம் ஆனைத்தோல் சுற்றிக் கரு உடல் கொண்ட ஒற்றை முலைச்சியை மயிற்பீலிகளால் மூடிய கண்களின் இருவம் மயூர பிச்சதுவஜம் அணிந்த பாழ்நிலத்தாள் விடியலாய் எழ இலையுடைதறித்த வனாந்தரி பயங்கரக் கரியநிறத்தில் காட்டை இருட்டித் தீர்த்தாள்"

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருள்வ_மௌத்திகம்&oldid=2057232" இலிருந்து மீள்விக்கப்பட்டது