இரு காரத்துவ எசுதர்

இருகாரத்துவ எசுதர் (Dibasic ester) என்பது இரண்டு கார்பாக்சிலிக் அமிலங்களின் எசுதர் ஆகும். பயன்பாட்டின் அடிப்படையில் ஆல்ககாலானது, மெத்தனால் அல்லது அதிக மூலக்கூறு எடை கொண்ட ஒற்றை ஆல்ககால்களாகவும் இருக்கலாம்.

தயாரிப்பு தொகு

பல்வேறு மெத்தில் இருகாரத்துவ எசுதர்களின் கலவைகள் வணிக ரீதியாக அடிபிக் அமிலம், குளுடாரிக் அமிலம் மற்றும் சக்சீனிக் அமிலம் போன்ற குறுகிய சங்கிலித்தொடர் அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.[1]

பண்புகள் தொகு

  • இலேசான பழத்தின் மனம் கொண்டது.
  • எளிதில் தீப்பற்றாதது.
  • எளிதில் மக்கும் தன்மையுடையது.
  • அரிக்கும் தன்மையற்றது
  • கார்பன்-8 - கார்பன்-10 வரையிலான ஆல்ககால்களைக் கொண்ட தாலேட்டுகள், அடிப்பேட்டுகள் மற்றும் அசிலேட்டுகள் ஆகியவற்றின் இரு காரத்துவ எசுதர்கள் உயவுப்பொருட்கள், சுழல் முடிச்சுகள் மற்றும் சேர்க்கைப் பொருட்கள் போன்ற வணிகப் பயன்பாட்டைக் கொண்டவையாக உள்ளன.[2][3]

பயன்கள் தொகு

வண்ணப்பூச்சுகள், கம்பிச்சுருளுகளுக்கான பூச்சுகள், வண்ணப்பூச்சுத் துண்டுகள், நெகிழியாக்கிகள், பிசின்கள், விரிசல்களை அடைக்கும் வேதிப்பொருட்கள், பாலிஆல்ககால்கள், கரைப்பான்கள், மண் உறுதிப்படுத்துதல், கூழ்மப்பிரிப்பு, பயிர் பாதுகாப்பு பொருட்கள், ஒட்டும் பொருட்கள் போன்றவையாக பயன்படுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Dibasic Esters". Chemical Online. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28.
  2. 2.0 2.1 "DBE: Solvents in Balance with the Environment". INVISTA. 2005. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28.
  3. "About Dibasic Esters". Hatco. பார்க்கப்பட்ட நாள் 2010-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_காரத்துவ_எசுதர்&oldid=2749177" இலிருந்து மீள்விக்கப்பட்டது