இரெய்னர் பிலிப்புசன்
செருமன் நாட்டு வேதியியலாளர்
இரெய்னர் பிலிப்புசன் (Rainer Philippson) செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளராவார். 1973 ஆம் ஆண்டு இமானுவேல் காசுபருடன் இணைந்து குளோகார்டோலோன் என்ற சிடீராய்டைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றதற்காக பிலிப்புசன் நன்கு அறியப்படுகிறார்.[1] காப்புரிமையின் அசல் ஒதுக்கீட்டாளர் செரிங்கு ஏ.ஜி. நிறுவனமாகும். முனைவர் பட்டம் பெற்றிருந்த பிலிப்புசன் 1950 - 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு பெரிலினிலுள்ள செருமன் அறிவியல் கழகத்தில் ஓர் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தார்.[2] 1960 ஆம் ஆண்டில் மேற்கு செருமனிக்கு இடம்பெயர்ந்து செரிங்கு ஏ.ஜி. நிறுவனத்தில் ஓர் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார். இந்நிறுவனம் வைத்திருந்த பல காப்புரிமைகளின் இணை கண்டுபிடிப்பாளராகவும் பிலிப்புசன் இருந்தார்.
இரெய்னர் பிலிப்புசன் Rainer Philippson | |
---|---|
தேசியம் | ஜெர்மனி |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | செருமன் அறிவியல் கழகம் , பெர்லின் செரிங்கு ஏ.ஜி நிறுவனம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Process for the preparation of 9alpha-chloro-11beta-hydroxy steroids, பார்க்கப்பட்ட நாள் 2015-12-07
- ↑ Tätigkeitsbericht der Forschungsgemeinschaft der Naturwissenschaftlichen, Technischen und Medizinischen Institute der Deutschen Akademie der Wissenschaften zu Berlin, 1960, p. 244