இரைபோசு
ரைபோஸ் (Ribose) என்பது எல்லா உயிரினங்களிலும் அடிப்படியாக உள்ள ஒரு வேதிப்பொருள். இது ஐந்து கரிம (கார்பன்) அணுக்களும் 10 ஹைட்ரஜன் அணுக்களும், ஐந்து ஆக்ஸிஜன் அணுக்களும் கொண்ட ஒரு வேதிப் பொருள். டி-ரைபோஸ் என்பது ஐந்து கரிம அணுக்கள் கொண்ட ஒற்றைச்சர்க்கரைப் பொருள் (சருக்கரை) (monosaccahride) ஆகும். ரைபோஸை சுருக்கமாக ஓர் ஐந்து கரிம இனியம் (பெண்ட்டோஸ், pentose) எனலாம். இதன் வேதியியல் மூலக்கூறு வாய்பாடு C5H10O5 ஆகும். இதனை 1905 ஆம் அண்டு ஃவேபஸ் லெவீன் (Phoebus Levene) என்பார் கண்டுபிடித்தார்.[1][2][3]
இந்த ரைபோஸானது ஆர் என் ஏ (RNA) என்னும் ரைபோ-நியூக்லிக்-ஆசிடின் ஒரு கூறு ஆகும். ஆர் என் ஏ என்பது உடலியக்கத்திற்கு அடிப்படைத் தேவையான உயிர்வேதிப்பொருள்களை உருவாக்கத் துணையாக இருக்கும் நீள்மான ஓரிழை மூலக்கூறு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Fischer, Emil; Piloty, Oscar (1891). "Ueber eine neue Pentonsäure und die zweite inactive Trioxyglutarsäure" (in de). Berichte der deutschen chemischen Gesellschaft 24 (2): 4214–4225. doi:10.1002/cber.189102402322. https://zenodo.org/record/1589397. பார்த்த நாள்: 12 March 2020.
- ↑ Levene, P. A.; Jacobs, W. A. (1909). "Über Inosinsäure" (in de). Berichte der deutschen chemischen Gesellschaft 42 (1): 1198–1203. doi:10.1002/cber.190904201196.
- ↑ Levene, P. A.; Jacobs, W. A. (1909). "Über die Pentose in den Nucleinsäuren" (in de). Berichte der deutschen chemischen Gesellschaft 42 (3): 3247–3251. doi:10.1002/cber.19090420351.