இரோசி யமாசிடா

இரோசி யமாசிடா (Prof. Hiroshi Yamashita) என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். [1] இவர் தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவரும் ஆவார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வினைச் செய்ய இந்தியா சென்று அங்கே சமசுகிருதம் கற்ற இவர், திராவிட மொழிகள் பற்றி ஆய்வினைச் செய்யும் பொழுது, தமிழ் மொழியின் தொன்மையறிந்து, அதன்மேல் பற்றுக்கொண்டு தமிழ் மொழியை சிறப்பாகக் கற்றவராவர். அத்துடன் தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் யப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆய்வு செய்தவராவர்.[2]

பேரா. இரோசி யமாசிடா
Ph.D. Hiroshi YAMASHITA.jpg
பிறப்புயப்பான்
பணிபேராசிரியர்
வலைத்தளம்
www.rpip.tohoku.ac.jp

தமிழ்ப் பணிகள்தொகு

தமிழ் மொழி தொடர்பான பல்வேறு பணிகளையும் செய்து வரும் இவர், உலகின் பல நாடுகளுக்கு பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியும் வருகிறார். அத்துடன் தமிழில் நூல்களை எழுதியும், தமிழ் நாவல்களை யப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தும் வருகிறார். அவற்றில் சில தமிழ் நாவல்கள் யப்பானிய மொழியில் வானொலி நாடகங்களாக இடம்பெற்றுள்ளதான தகவல்களும் அறியக்கிடைக்கின்றன. [3]

சான்றுகோள்கள்தொகு

  1. "Professor Hiroshi Yamashita". 2008-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. Japanese Professor Speaks Tamil
  3. "He has even written Tamil books and translated many Tamil novels into Japanese. Some of these novels have also been turned into radio dramas in Japanese". 2008-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-17 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோசி_யமாசிடா&oldid=3544357" இருந்து மீள்விக்கப்பட்டது