இர்பன் அபீப்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இர்பன் அபீப் ( Irfan Habib 1931) என்பவர் மார்க்சிய வரலாற்று ஆசிரியர் ஆவார். இந்து சமய, இசுலாம் சமய அடிப்படைவாதக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்திய வரலாறு தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார்.
இர்பன் அபீப் Irfan Habib | |
---|---|
பிறப்பு | 12 ஆகத்து 1931 (அகவை 93) வடோதரா |
படித்த இடங்கள் |
|
வேலை வழங்குபவர் | |
பிறப்பும் கல்வியும்
தொகுகல்வியில் சிறந்த குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை முகமது அபீபும் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆவார். அலிகர் முசுலிம் பல்கலைக் கழகத்தில் பள்ளிக் கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். வரலாறு பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆக்சுபோர்டு நியூ காலேசில் சேர்ந்து ஆய்வுப் பட்டம் பெற்றார்
பல்கலைக் கழகப் பணி
தொகுஆக்சுபோர்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய இர்பான் அபீப், அலிகர் முசுலிம் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1969 முதல் 1991 வரை அப்பணியில் இருந்தார். அலிகர் முசுலிம் பல்கலையில் ஓய்வு பெற்றதும் கௌரவப் பேராசிரியராக (Emeritus) அப்பல்கலைக் கழகத்தில் பதவி வகிக்கிறார்.
எழுத்துப் பணி
தொகுதொன்மை இந்தியாவின் வரலாற்று நிலவியல் பற்றியும் இந்தியத் தொழில் நுட்ப வரலாறு பற்றியும் இடைக்கால இந்தியாவின் நிருவாக, பொருளியல் வரலாறு பற்றியும் ஆய்வு செய்து நூல்களைப் படைத்துள்ளார். மார்க்சியம், சமயச் சார்பின்மை ஆகியவற்றில் கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். 1991 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டில் இராதாகிருட்டினன் நினைவுச் சொற்பொழிவு ஆற்றினார். 1997 முதல் பிரிட்டிசு ராயல் வரலாற்றுக் கழகத்தில் சிறப்பு உறுப்பினராக உள்ளார். 1998 இல் இந்திய வரலாற்றுப் பேராயத்தில் இடம் பெற்றார்.
விருதுகள்
தொகு- பத்ம பூசண் விருது (2005)
- முசாபர் அகமது நினைவுப் பரிசு (2006)
- பனாரசு இந்துப் பல்கலையில் முனைவர் பட்டம் (2008)
- அமெரிக்க வரலாற்றுச் சங்கம் வழங்கிய வாட்டுமுல் பரிசு (1982)
(இப்பரிசை தபன் ரேசவுத்திரி என்பவருடன் பகிர்ந்து கொண்டார்)
எழுதிய நூல்கள்
தொகு- The Agrarian System of Mughal India 1556–1707. First published in 1963 by Asia Publishing House. Second, extensively revised, edition published in 1999 by Oxford University Press.
- An Atlas of the Mughal Empire: Political and Economic Maps With Detailed Notes, Bibliography, and Index. Oxford University Press, 1982
- Essays in Indian History – Towards a Marxist Perception. Tulika Books, 1995.
- The Economic History of Medieval India: A Survey. Tulika Books, 2001.
- Medieval India: The Study of a Civilization. National Book Trust, 2008.
- People's History of India – Part 1: Prehistory. Aligarh Historians Society and Tulika Books, 2001.
- People’s History of India Part 2 : The Indus Civilization. Aligarh Historians Society and Tulika Books, 2002.
- A People's History of India Vol. 3 : The Vedic Age. (Co-author Vijay Kumar Thakur) Aligarh Historians Society and Tulika Books, 2003.
- A People's History of India – Vol 4 : Mauryan India. (Co-author Vivekanand Jha) Aligarh Historians Society and Tulika Books, 2004.
- A People's History of India – Vol 28 : Indian Economy, 1858–1914. Aligarh Historians Society and Tulika Books, 2006.
மேற்கோள்
தொகு- http://timesofindia.indiatimes.com/interviews/Religious-history-should-be-subjected-to-a-scientific-approach-Irfan-Habib/articleshow/32978369.cms
- http://timesofindia.indiatimes.com/india/Babri-not-Hindu-Muslim-fight-Irfan-Habib/articleshow/45403692.cms
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/we-need-to-have-a-research-balance-says-irfan-habib/article6045314.ece