இறக்கைபாரம்
காற்றியக்கவியலில் இறக்கைபாரம் (Wing Loading) என்பது முழு வானூர்தியின் எடையை (எரிபொருள், பயணக்குழு மற்றும் பயண பாரம் ஆகியவை ஏற்றப்பட்டிருந்தால் அவற்றின் எடையும் சேர்த்து) வானூர்தியின் இறக்கைப் பரப்பளவால் வகுக்கக் கிடைப்பதாகும். ஒரு வானூர்தியின் வேகத்துக்கு நேர்விகித்ததில் அதன் இறக்கையின் ஒவ்வொரு அலகிலும் ஏற்றம் அதிகரிக்கிறது, ஆகவே வழமையில் சிறிய இறக்கையும் குறிப்பிட்ட எடையைத் தூக்கிச் செல்வதற்கான ஏற்றத்தை நிலையான பறத்தலில் அதிக இறக்கைபாரத்தில் செல்லும்போது உருவாக்கும். அதற்குநேராக, தரையிறக்க மற்றும் வானேற்ற வேகங்களும் அதிகமாக இருக்கும். அதிக இறக்கைபாரத்தால் வானூர்தியின் நழுவியக்கச் சுதந்திரமும் குறைகிறது. இவையனைத்தும் இறக்கையுடைய உயிரிகளுக்கும் பொருந்தும்.
அலகுகள்
தொகுவழமையாக இறக்கைபாரங்கள் lb/ft2 (அ) kg/m2 (அ) N/m2 அலகுகளில் குறிக்கப்படுகின்றன.
வெளியிணைப்புகள்
தொகு- NASA article on wing loading Retrieved 8 February 2008