இறையாண்மை தங்கப் பத்திரம்

இறையாண்மை தங்கப் பத்திரம் (SGB |Sovereign Gold Bond) ​​கள் என்பது கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசாங்கப் பத்திரங்கள் ஆகும். 2015 நவம்பரில் தங்கத்தைப் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் அரசால் சவரன் தங்கப் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது.[1] அவை தங்கத்தை பொருளாக வைத்திருப்பதற்கு மாற்றாக உள்ளன. முதலீட்டாளர்கள் வெளியீட்டு விலையை ரொக்கமாக செலுத்த வேண்டும் மற்றும் முதிர்ச்சியின் போது இந்த தங்கப்பத்திரங்கள் பணமாக மீட்டெடுக்கப்படும். இந்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் இந்த பத்திரம் வழங்கப்படுகிறது.[2]

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அரசாங்கம் 31,290 கோடி ரூபாயை இறையாண்மை தங்கப் பத்திர (SGB) திட்டத்திலிருந்து வசூலித்துள்ளது.[3]

தகுதிகள்

தொகு

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி இந்தியாவில் வசிக்கும் நபர்கள் SGB இல் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள். தகுதியான முதலீட்டாளர்களில் தனிநபர்கள், HUFகள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அடங்குவர்.

இந்த தங்கப்பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு ஒரு கிராம் முதல் தனிநபர்களுக்கான அதிகபட்ச சந்தா 4 கிலோவாகவும், இந்து கூட்டுக் குடும்பத்திற்கு (HUF) 4 கிலோவாகவும், அறக்கட்டளைகளுக்கு 20 கிலோவாகவும் உள்ளது.

இந்த தங்கப்பத்திரத்தின் கால அளவு 8 ஆண்டுகள் ஆகும், இருப்பினும் 5, 6, 7 ஆண்டுகளில் சந்தாதாரர் விருப்பபடின் முன்னரே விலகிக்கொள்ளலாம்.[4]

சான்றுகள்

தொகு