இலக்குமணராவ் இனாம்தார்
இலக்குமண ராவ் இனாம்தார் (Lakshman Rao Inamdar), (19 செப்டம்பர் 1917 – 1985) பிரபலமாக வக்கீல் சாகேப் என்று அழைக்கப்படும் இவர் சாகர் பாரதி எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தினார். குஜராத் மாநிலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை நிறுவிய தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இவர் நரேந்திர மோதியை பால சுயம்சேவகராக அறிமுகப்படுத்தியவரும், மோதியின் அரசியல் குருவும் ஆவார். [1][2]
நரேந்திர மோதி ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக இருந்த போது இலக்குமணராவ் இனாம்தார் குஜராத் பிராந்திய பிரச்சாரகராக இருந்தார். இதனால் இருவர்களிடையே நல்ல பிணைப்பு இருந்தது.[3]நரேந்திர மோதியின் கூற்றுப்படி, தனிப்பட்ட விஷயங்களில் மோதியின் நம்பிக்கைக்குரிய ஒரே நபர் இனாம்தார் மட்டுமே.
இனாம்தார் மீது நரேந்திர மோதி மிகவு மரியாதை கொண்டவர் என நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் நிரஞ்சன் முகோபாத்தியா எழுதியுள்ளார்.
நரேந்திர மோதிக்கு இந்து-முஸ்லீகளுக்கிடையே நல்லுறவுகள் குறித்து இலக்குமண இனாம்தார் ஒரு வடிவம் கொடுத்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Marino, Andy (2014). Narendra Modi: A Political Biography. HarperCollins Publishers India. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5136-218-0.
- ↑ "The man behind Modi: Lakshmanrao Inamdar". 30 November 1999. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
- ↑ "Mentoring Modi". பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.
- ↑ "Modi's mentors: Inamdar, who shaped his ideas of Hindu-Muslim relations". 20 February 2014. பார்க்கப்பட்ட நாள் 21 June 2015.